Skip to content

Urijah

5 வசனங்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Uriah

Urijah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. இதன்பின் அரசன் ஆகாஸ், அசீரிய அரசன் திக்லாத்பிலேசரைச் சந்திப்பதற்கு தமஸ்குவுக்குப் போனான். அவன் தமஸ்குவில் ஒரு பலிபீடத்தைக் கண்டு, அதன் அளவு விபரங்கள் உள்ளடங்கிய வரைபடத்தை ஆசாரியனான உரியாவுக்கு அனுப்பினான்.

  2. அப்படியே ஆசாரியனான உரியா தமஸ்குவிலிருந்து ஆகாஸ் தனக்கு அனுப்பிய வரைபடத்தின்படியே, ஆகாஸ் அரசன் திரும்பி வருவதற்கு முன்பே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான்.

  3. இதன்பின் ஆகாஸ் அரசன் ஆசாரியனான உரியாவுக்குப் பின்வரும் கட்டளையைக் கொடுத்தான். அவன், “இனிமேல் காலையில் செலுத்தும் தகன காணிக்கையையும், மாலையில் செலுத்தும் தானிய காணிக்கையையும், அரசனுடைய தகன காணிக்கை, தானிய காணிக்கை ஆகியவற்றையும், எல்லா நாட்டு மக்களுடைய தகன காணிக்கைகள், தானிய காணிக்கை, பானகாணிக்கை ஆகிய யாவும் புதிய, பெரிய பலிபீடத்தில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் எல்லா தகன காணிக்கையின், பலிகளின், இரத்தம் முழுவதையும் புதிய பலிபீடத்தில் தெளிக்கவேண்டும். ஆனால் அந்த வெண்கலப் பலிபீடத்தையோ நான் எனக்கு வழிகாட்டுதலை அறிவதற்காக உபயோகிப்பேன்” என்றான்.

  4. ஆகாஸ் அரசன் கட்டளையிட்டது போலவே ஆசாரியன் உரியா செய்தான்.

  5. அதற்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருக்கும்படி ஆசாரியன் உரியாவையும், எபரேக்கியாவின் மகன் சகரியாவையும் நான் அழைப்பேன் என்றார்.