உள்ளடக்கத்திற்குச் செல்க

God பற்றிய பைபிள் வசனங்கள்

662 வசனங்கள் · 46 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “நீர் என்னிடம், ‘நான் பேசுகிறேன், இப்பொழுது நீ கேள்’ என்றும்; ‘நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்’ என்றும் சொன்னீரே.

  2. உம்மைப்பற்றி என் காதுகள் கேட்டிருந்தன; இப்பொழுதோ என் கண்களே உம்மைக் கண்டிருக்கின்றன.

  3. ஆகையால் நான் என்னை வெறுத்து, தூசியிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்புகிறேன்.”

  4. உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,

  5. மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?

  6. நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.

  7. உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்:

  8. தாவீதின் சங்கீதம். பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை, உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.

  9. ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி, தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.

  10. யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.

  11. அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.

  12. பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.

  13. பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே; நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர்.

  14. அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.

  15. அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார்.

  16. எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் சங்கீதம். யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; எல்லாத் தலைமுறைகளுக்கும் உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.

  17. உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன்.

  18. வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.

  19. வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன.

  20. ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.

  21. நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.

  22. ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.

  23. காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.

  24. அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.

  25. “யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.