உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. உபாகமம் 20:3சுமார் கி.மு. 1451

    அவன் சொல்லவேண்டியதாவது: “இஸ்ரயேலின், கேளுங்கள், இன்று நீங்கள் உங்கள் பகைவரை எதிர்த்துப் போர் புரியப்போகிறீர்கள். சோர்வடையாதீர்கள் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள் அவர்களுக்குமுன் பீதியடையாதீர்கள்.

  2. உபாகமம் 20:4சுமார் கி.மு. 1451

    ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதற்காக உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போர்புரிய உங்களுடன் போகிறார்.”

  3. உபாகமம் 20:5சுமார் கி.மு. 1451

    மேலும் அதிகாரிகள் இராணுவவீரரிடம் சொல்லவேண்டியதாவது: “புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகலாம். அவன் யுத்தத்தில் செத்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யக்கூடும்.

  4. உபாகமம் 20:6சுமார் கி.மு. 1451

    திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதன் பலனை அனுபவியாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்; அவன் யுத்தத்தில் செத்தால், வேறொருவன் அத்தோட்டத்தின் பலனை அனுபவிப்பான்.

  5. உபாகமம் 20:7சுமார் கி.மு. 1451

    தனக்கு நிச்சயித்த பெண்ணை இன்னும் திருமணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம். அவன் போரில் செத்தால், அந்தப் பெண்ணை வேறொருவன் திருமணம்செய்வான்” என்று சொல்லவேண்டும்.

  6. உபாகமம் 20:8சுமார் கி.மு. 1451

    மேலும் அதிகாரிகள் அவர்களிடம், “பயப்படுகிற அல்லது உள்ளத்தில் சோர்வுடைய யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லவேண்டும். ஏனெனில், அவனுடைய உடன் இராணுவவீரர் அவனைப்போல் சோர்வடையாமல் இருக்கவேண்டுமே. அதற்காகவே இப்படிச் சொல்லவேண்டும்.

  7. உபாகமம் 20:9சுமார் கி.மு. 1451

    அதிகாரிகள் இராணுவவீரருடன் பேசி முடித்தபின், அந்த படைக்கு தளபதிகளை நியமிக்கவேண்டும்.

  8. உபாகமம் 20:10சுமார் கி.மு. 1451

    ஒரு பட்டணத்தைத் தாக்குவதற்கு அணிவகுத்துச் செல்லும்போது, அதைக் நெருங்கியவுடன் அதன் மக்களுடன் சமாதானத்துக்கு வர முயற்சி செய்யுங்கள்.

  9. உபாகமம் 20:11சுமார் கி.மு. 1451

    அவர்கள் அதற்கு உடன்பட்டு தங்கள் வாசல்களைத் திறந்தால், அங்குள்ள யாவரும் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் உங்களுக்கு வேலைசெய்யவேண்டும்.

  10. உபாகமம் 20:12சுமார் கி.மு. 1451

    ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள்.

  11. உபாகமம் 20:13சுமார் கி.மு. 1451

    உங்கள் இறைவனாகிய யெகோவா அந்தப் பட்டணத்தை உங்களுக்குக் கொடுப்பார். அப்போது அங்குள்ள ஆண்கள் யாவரையும் வாளால் வெட்டிப்போடுங்கள்.

  12. உபாகமம் 20:14சுமார் கி.மு. 1451

    பட்டணத்திலுள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் உங்களுக்காக கொள்ளைப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளைப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

  13. உபாகமம் 20:15சுமார் கி.மு. 1451

    உங்களுக்குத் தூரத்திலுள்ள, எந்த நாட்டையும் சேராத பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் இப்படியே செய்யவேண்டும்.

  14. உபாகமம் 20:16சுமார் கி.மு. 1451

    ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாடுகளின் பட்டணங்களில் உள்ள உயிருள்ள எதையும், எவ்வழியிலும் தப்பவிடவேண்டாம்.

  15. உபாகமம் 20:17சுமார் கி.மு. 1451

    இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய எல்லோரையும் முற்றிலும் அழித்துவிடுங்கள்.

  16. உபாகமம் 20:18சுமார் கி.மு. 1451

    ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதால் செய்கிற அருவருப்பான செயல்களை நீங்கள் பின்பற்றும்படி உங்களுக்கும் போதிப்பார்கள். நீங்களும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்வீர்கள்.

  17. உபாகமம் 20:19சுமார் கி.மு. 1451

    நீங்கள் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு அதற்கு எதிராகச் சண்டையிட்டு நீண்டகாலமாக முற்றுகையிட்டிருந்தால், அங்குள்ள மரங்களை கோடரியால் வெட்டி அழிக்கவேண்டாம். ஏனெனில் அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அவற்றை வெட்டி விழுத்தவேண்டாம். மரங்களை முற்றுகையிடுவதற்கு அவை என்ன மனிதர்களா?

  18. உபாகமம் 20:20சுமார் கி.மு. 1451

    ஆனாலும், பழங்கொடாத மரங்கள் என நீங்கள் அறிந்தால் அவற்றை வெட்டுங்கள். நீங்கள் சண்டைசெய்யும் பட்டணம் வீழ்ச்சியடையும்வரை அரண்கட்டுவதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம்.

  19. உபாகமம் 21:1சுமார் கி.மு. 1451

    உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற நாட்டிலே கொலைசெய்யப்பட்ட ஒருவன், வெளியில் கிடப்பதைக் கண்டு, அவனைக் கொலைசெய்தவன் யார் என்று தெரியாதிருக்கக்கூடும்.

  20. உபாகமம் 21:2சுமார் கி.மு. 1451

    அப்படியானால் உங்களுடைய சபைத்தலைவர்களும், நீதிபதிகளும் அங்குபோய், பிரேதம் கிடக்கும் இடத்திற்கும், சூழ இருக்கும் பட்டணங்களுக்கும் உள்ள தூரத்தை அளக்கவேண்டும்.

  21. உபாகமம் 21:3சுமார் கி.மு. 1451

    பிரேதத்துக்குக் நெருங்கிய பட்டணத்திலுள்ள சபைத்தலைவர்கள், வேலைசெய்யாததும் நுகம் பூட்டப்படாததுமான ஒரு இளம்பசுவை எடுக்கவேண்டும்.

  22. உபாகமம் 21:4சுமார் கி.மு. 1451

    அம்முதியவர்கள் உழப்படாததும், விதைக்கப்படாததும், ஓடும் நீருள்ளதுமான பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோக வேண்டும். அங்கே அந்தப் பள்ளத்தாக்கில் அந்தப் பசுவின் கழுத்தை முறித்துப்போடவேண்டும்.

  23. உபாகமம் 21:5சுமார் கி.மு. 1451

    லேவியின் மகன்களான ஆசாரியர்கள் அங்கு வரவேண்டும். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்கு ஊழியம்செய்யவும், யெகோவா பேரில் ஆசீர்வாதம் கூறவும், எல்லா வழக்குகளும், தாக்குதலுமான வழக்குகளுக்கும் தீர்ப்புவழங்கவும் அவர்களையே தெரிந்தெடுத்தார்.

  24. உபாகமம் 21:6சுமார் கி.மு. 1451

    பிரேதத்துக்குக்கு நெருங்கிய பட்டணங்களிலுள்ள சபைத்தலைவர்கள் பள்ளத்தாக்கில் முறிக்கப்பட்ட பசுவுக்குமேலாகத் தங்கள் கைகளைக் கழுவவேண்டும்.

  25. உபாகமம் 21:7சுமார் கி.மு. 1451

    அப்பொழுது தலைவர்கள், “நமது கைகள் இந்த இரத்தத்தைச் சிந்தவுமில்லை, நமது கண்கள் இக்கொலையைக் காணவுமில்லை;