- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
- லேவியராகமம் 27:3சுமார் கி.மு. 1491
இருபது வயதிற்கும் அறுபது வயதிற்கும் இடைப்பட்ட, ஆணுக்குரிய மதிப்பு பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
- லேவியராகமம் 27:4சுமார் கி.மு. 1491
அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
- லேவியராகமம் 27:5சுமார் கி.மு. 1491
ஐந்து வயதிற்கும் இருபது வயதிற்கும் இடைப்பட்ட ஒரு நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு இருபது சேக்கலும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கலும் ஆகும்.
- லேவியராகமம் 27:6சுமார் கி.மு. 1491
ஒரு மாதத்திற்கும், ஐந்து வருடத்திற்கும் இடைப்பட்ட ஆண் பிள்ளைக்குரிய மதிப்பு ஐந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண் பிள்ளைக்குரிய மதிப்பு மூன்று சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும்.
- லேவியராகமம் 27:7சுமார் கி.மு. 1491
அறுபது வயதிற்கும் அதற்கும் மேற்பட்ட நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு பதினைந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும்.
- லேவியராகமம் 27:8சுமார் கி.மு. 1491
நேர்த்திக்கடனை செய்கிறவன் குறிப்பிடப்பட்ட தொகையைச் செலுத்தமுடியாத அளவு ஏழையாயிருந்தால், அவன் அந்த நபரை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். நேர்த்திக்கடனைச் செய்கிற மனிதனின் தகுதிக்கேற்ப அவனுடைய மதிப்பை ஆசாரியன் நிர்ணயிப்பான்.
- லேவியராகமம் 27:9சுமார் கி.மு. 1491
“ ‘ஒருவன் நேர்த்திக்கடன் செய்தது யெகோவாவுக்குக் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மிருகமானால், யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மிருகம் பரிசுத்தமாயிருக்கிறது.
- லேவியராகமம் 27:10சுமார் கி.மு. 1491
அவன் அதை மாற்றி எடுக்கக்கூடாது. கெட்டவைக்காக நல்லதையோ, நல்லவைக்காக கெட்டதையோ பதிலீடு செய்யக்கூடாது. ஒரு மிருகத்திற்காக வேறொரு மிருகத்தை பதிலீடு செய்தால், அதுவும் பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமாகின்றன.
- லேவியராகமம் 27:11சுமார் கி.மு. 1491
ஆனாலும், யெகோவாவுக்குக் காணிக்கையாக நேர்த்திக்கடன் செய்யப்பட்ட மிருகம் ஏற்றுக்கொள்ளத் தகாததானால், சம்பிரதாயப்படி அசுத்தமான அது, அவனால் ஆசாரியன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படவேண்டும்.
- லேவியராகமம் 27:12சுமார் கி.மு. 1491
ஆசாரியன் அது நல்லதோ, கெட்டதோ என்று அதன் தன்மையை மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
- லேவியராகமம் 27:13சுமார் கி.மு. 1491
அதன் உரிமையாளன் அந்த மிருகத்தை மீட்டுக்கொள்ள விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
- லேவியராகமம் 27:14சுமார் கி.மு. 1491
“ ‘ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணித்தால், அது நல்லதோ, கெட்டதோ என அதன் தரத்தை ஆசாரியன் மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
- லேவியராகமம் 27:15சுமார் கி.மு. 1491
தன் வீட்டை அர்ப்பணிக்கிற மனிதன் அதை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வீடு திரும்பவும் அவனுக்குரியதாகும்.
- லேவியராகமம் 27:16சுமார் கி.மு. 1491
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால், அதற்குத் தேவையான விதைத் தானியத்தின் அளவுக்கேற்றபடி அதன் மதிப்பைத் தீர்மானிக்கவேண்டும். ஒரு ஓமர் அளவு வாற்கோதுமை விதைக்கு ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசுகள் என மதிக்கப்பட வேண்டும்.
- லேவியராகமம் 27:17சுமார் கி.மு. 1491
அவன் தனது வயலை யூபிலி வருடத்தில் அர்ப்பணிப்பதானால், தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அப்படியே இருக்கும்.
- லேவியராகமம் 27:18சுமார் கி.மு. 1491
ஆனால் அவன் தன் வயலை யூபிலி வருடத்திற்குப்பின் அர்ப்பணிப்பதானால், அடுத்த யூபிலி வருடம்வரை மீதமுள்ள வருடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசாரியன் அதன் மதிப்பைத் தீர்மானிக்கப்பட்ட மதிப்பிலிருந்து குறைக்கவேண்டும்.
- லேவியராகமம் 27:19சுமார் கி.மு. 1491
அந்த வயலை அர்ப்பணிக்கிறவன் அதை மீட்க விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வயல் திரும்பவும் அவனுக்குரியதாகும்.
- லேவியராகமம் 27:20சுமார் கி.மு. 1491
ஆனாலும் அவன் அந்த வயலை மீட்டுக்கொள்ளாவிட்டால் அல்லது வேறொருவனுக்கு விற்றால், அந்த வயலை ஒருபோதும் மீட்கமுடியாது.
- லேவியராகமம் 27:21சுமார் கி.மு. 1491
யூபிலி, வருடத்தில் அந்த வயல் திருப்பிக் கொடுக்கப்படும்பொழுது, யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வயலைப்போல அது பரிசுத்தமாகும். அது ஆசாரியர்களின் சொத்தாகும்.
- லேவியராகமம் 27:22சுமார் கி.மு. 1491
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் பங்கு அல்லாத வயலை வாங்கி, அதை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால்,
- லேவியராகமம் 27:23சுமார் கி.மு. 1491
ஆசாரியன் அதன் மதிப்பை யூபிலி வருடம் வரைக்கும் தீர்மானிப்பான். அந்த மனிதன் அந்த நாளிலே அதன் மதிப்பை யெகோவாவுக்கு பரிசுத்தமானதாகச் செலுத்தவேண்டும்.
- லேவியராகமம் 27:24சுமார் கி.மு. 1491
அந்த வயல் யாருக்குச் சொந்தமாய் இருந்து, யாரிடத்தில் வாங்கப்பட்டதோ அது யூபிலி வருடத்தில் அவனுக்கே திரும்பவும் சேரும்.
- லேவியராகமம் 27:25சுமார் கி.மு. 1491
எல்லா மதிப்பும் பரிசுத்த இடத்தின் சேக்கலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.
- லேவியராகமம் 27:26சுமார் கி.மு. 1491
“ ‘தலையீற்று ஏற்கெனவே யெகோவாவுக்கு சொந்தமாய் இருக்கிறது. ஆகையால் ஒருவனும் ஒரு மிருகத்தின் தலையீற்றை அர்ப்பணிக்கக் கூடாது. அது மாடானாலும் சரி, செம்மறியாடானாலும் சரி, அது யெகோவாவுக்கே உரியது.
- லேவியராகமம் 27:27சுமார் கி.மு. 1491
அது அசுத்த மிருகங்களில் ஒன்றானால், அதற்காக மதிப்பிடப்பட்ட மதிப்பையும், அதன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்து, அவன் அதைத் திரும்ப வாங்கலாம். அவன் மீட்காவிட்டால் அதற்காக தீர்மானித்த மதிப்புக்கு அது விற்கப்படவேண்டும்.