உள்ளடக்கத்திற்குச் செல்க

Zebulun

46 வசனங்கள் · 17 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Zabulon

Zebulun பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அமலேக்கியர் வாழும் இடமான எப்பிராயீமிலிருந்து சிலர் வந்தார்கள். பென்யமீனியர் உன்னைப் பின்தொடர்ந்தவர்களுடன் சேர்ந்தார்கள். மாகீரில் இருந்து தலைவர்களும் வந்தார்கள். செபுலோனிலிருந்து அதிகாரிகளும் வந்தார்கள்.

  2. செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர்.

  3. பின்பு அவன் மனாசே நாடு முழுவதற்கும் தூதுவர்களை அனுப்பி அவர்களையும் ஆயுதம் தரிக்கும்படி அழைத்தான். அதோடு ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்களும் அவர்களைச் சந்திக்கப் போனார்கள்.

  4. பின் ஏலோன் இறந்து செபுலோன் நாட்டில் ஆயலோன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.

  5. இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

  6. மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

  7. லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.

  8. செபுலோன் மனிதர்களில் போருக்கு ஆயத்தமாக எல்லாவித ஆயுதங்களையும் உபயோகித்து, அணிவகுத்து நிற்க அனுபவம் பெற்றிருந்தவர்களும், அரசன் தாவீதுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களும் 50,000 பேர்.

  9. அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று.

  10. செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;

  11. அந்தத் தூதுவர்கள் எப்பிராயீம், மனாசே நாடுகளிலும், செபுலோன்வரை பட்டணம் பட்டணமாக போனார்கள். ஆனால் மக்கள் அவர்களை இகழ்ந்து ஏளனம் செய்தனர்.

  12. இருந்தாலும் ஆசேர், மனாசே, செபுலோன் கோத்திரங்களைச் சேர்ந்த சில மனிதர் தங்களைத் தாழ்த்தி எருசலேமுக்குப் போனார்கள்.

  13. எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்களில் அதிகமானோர் தங்களைச் சுத்திகரிக்காமல் இருந்தார்கள். ஆனாலும், எழுதப்பட்டிருக்கிறதற்கு மாறாக அவர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். ஏனெனில் எசேக்கியா அவர்களுக்காக, “நல்லவராயிருக்கிற யெகோவா ஒவ்வொருவரையும் மன்னிப்பாராக.

  14. சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.

  15. ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.

  16. செபுலோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை இசக்காரின் பங்கின் எல்லையோடிருக்கும்.

  17. காத் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை செபுலோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.

  18. நீளம் 4,500 முழமான தெற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் சிமியோன் வாசல், இசக்கார் வாசல், செபுலோன் வாசல் எனப் பெயரிடப்படும்.

  19. அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.

  20. “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,

  21. செபுலோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், யோசேப்பு கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், பென்யமீன் கோத்திரத்திலிருந்து, 12,000 பேரும் முத்திரையிடப்பட்டார்கள்.