உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Gad பற்றிய பைபிள் வசனங்கள்

93 வசனங்கள் · 25 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. இறைவன் தன் மக்களுக்கு இந்த யுத்தங்களில் உதவி செய்தார். அவர் ஆகாரியரையும் அவர்களுடைய எல்லா பகைவர்களையும் இவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார். ஏனெனில் இந்த யுத்தம் நடக்கும்போது அவர்கள் இறைவனிடம் கதறி அழுதனர். அவர்கள் யெகோவாவை நம்பியிருந்தபடியினால், அவர்களுடைய விண்ணப்பத்திற்கு அவர் பதிலளித்தார்.

  2. அவர்கள் ஆகாரியரின் வளர்ப்பு மிருகங்களான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதாயிரம் செம்மறியாடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும் கைப்பற்றினர். அத்துடன் ஒரு இலட்சம் மக்களையும் சிறைபிடித்தனர்.

  3. போர் இறைவனால் நடத்தப்பட்டதால், அநேகம்பேர் விழுந்து மடிந்தனர். இவர்கள் நாடுகடத்தப்படும்வரை அங்கேயே வாழ்ந்தனர்.

  4. அதோடு பாலைவனத்தில் அரணான இடத்தில் இருந்த தாவீதிடம் சில காத்தியர்கள் வந்தார்கள். இவர்கள் ஆற்றல்மிக்க போர்வீரரும், சண்டையிடப் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், கேடயமும் ஈட்டியும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுமாய் இருந்தார்கள். இவர்கள் சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும் மலையில் வாழும் மானைப்போல் வேகமாக ஒடக்கூடியவர்களுமாவர். அவர்கள் பெயர்களாவன:

  5. பிரதான தலைவனான எத்சேர், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாப்,

  6. நான்காவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,

  7. ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,

  8. எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,

  9. பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி.

  10. காத்தியரான இவர்கள் படைத்தளபதிகளாய் இருந்தவர்கள்; இவர்களில் சிறியவன் நூறுபேருக்கும், பெரியவன் ஆயிரம்பேருக்கும் நிகராயிருந்தான்.

  11. யோர்தான் நதிக்கரை புரண்டோடும் முதலாம் மாதத்தில் அதைக் கடந்துவந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளிலும் வாழ்ந்துவந்த யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.

  12. “தீபோன் மகளின் குடிகளே! நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி வறண்ட நிலத்தில் உட்காருங்கள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள பட்டணங்களை அழித்துப் போடுவான்.

  13. அரோயேரில் குடியிருப்பவர்களே! தெருவோரமாய் நின்று கவனித்துப் பாருங்கள்; ஓடுகிற மனிதனிடமும், தப்பி ஓடுகிற பெண்ணிடமும், ‘நடந்தது என்ன?’ என்று கேளுங்கள்.

  14. மோவாப் தகர்க்கப்பட்டபடியால், அது அவமதிக்கப்பட்டிருக்கிறது. ஓலமிட்டு அழுங்கள். மோவாப் அழிக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.

  15. சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. ஓலோன், யாத்சா, மேபாகாத் பட்டணங்களுக்கும்,

  16. தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும்,

  17. கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும்,

  18. கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள மோவாபின் பட்டணங்கள் எல்லாவற்றுக்கும் நியாயத்தீர்ப்பு வந்துள்ளது.