Skip to content

Purification பற்றிய பைபிள் வசனங்கள்: Scriptures relating to

60 வசனங்கள் · 13 அம்சங்கள்

Scriptures relating to பற்றிய வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எனவே யாக்கோபு தன் குடும்பத்தாரிடமும், தன்னோடிருந்த எல்லோரிடமும், “நீங்கள் வைத்திருக்கும் அந்நிய தெய்வங்களை விலக்கிப் போடுங்கள்; உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றுங்கள்.

  2. பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம்போய், இன்றும் நாளையும் அவர்களை பரிசுத்தப்படுத்து. அவர்கள் தங்கள் உடைகளைக் கழுவும்படியும் செய்யவேண்டும்.

  3. மோசே மலையிலிருந்து இறங்கி இஸ்ரயேல் மக்களிடம் வந்து, அவர்களை பரிசுத்தப்படுத்தினான். அவர்களும் தங்கள் உடைகளைக் கழுவினார்கள்.

  4. பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவவேண்டும்.

  5. “நீ கழுவுவதற்காக ஒரு வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் செய்யவேண்டும். அதைச் சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.

  6. அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும்.

  7. அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதெல்லாம் தாங்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் கழுவவேண்டும். அத்துடன், நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவந்து ஆசாரிய ஊழியம் செய்வதற்காக பலிபீடத்தை அணுகும்போதும்,

  8. அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவவேண்டும். இது ஆரோனுக்கும், அவன் சந்ததியினருக்கும் தலைமுறைதோறும் நிரந்தர நியமமாயிருக்கும்.”

  9. “அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும்.

  10. பின்பு சபைக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் இடையில் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதற்குள் தண்ணீரை ஊற்றினான்.

  11. மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள்.

  12. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதும் அல்லது பீடத்திற்கு அருகே வரும்போதும் தங்களைக் கழுவிக்கொள்வார்கள்.

  13. பின்பு மோசே ஆரோனையும் அவன் மகன்களையும் சபைக்கு முன்பாக அழைத்துவந்து, அவர்களைத் தண்ணீரால் கழுவினான்.

  14. “சுத்தமாக்கப்பட வேண்டியவன் தன் உடைகளைக் கழுவி, தலைமயிர் முழுவதையும் சிரைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருப்பான். இதன்பின் அவன் தனது முகாமுக்கு வரலாம். ஆனாலும் ஏழுநாட்களுக்கு அவன் தன் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருக்கவேண்டும்.

  15. அவன் ஏழாம்நாளில் தன் மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும். தலை, தாடி, புருவம் ஆகியவற்றிலுள்ள உரோமங்களையும், மற்ற இடங்களிலுள்ள உரோமங்களையும் சிரைக்கவேண்டும். தன் உடைகளைத் தண்ணீரில் கழுவி, முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.

  16. “ ‘அவன் படுக்கின்ற எந்தக் கட்டிலும், அவன் உட்காருகிற எந்த இடமும் அசுத்தமாகும்.

  17. யாராவது ஒருவன் அந்தக் கட்டிலைத் தொட்டால் அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான்.

  18. கசிவு உள்ள அந்த மனிதன் உட்கார்ந்த இடத்தில் யாராவது உட்கார்ந்தால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.

  19. “ ‘கசிவுள்ளவனைத் தொடுகிறவனும் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.

  20. “ ‘கசிவுள்ள அந்த மனிதன் சுத்தமுள்ள ஒருவன்மேல் துப்பினால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.

  21. “ ‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும்.

  22. அவன் உட்கார்ந்த எந்தப் பொருளையும் தொடுகிறவன், மாலைவரை அசுத்தமாயிருப்பான். அப்படிப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.

  23. “ ‘கசிவு உள்ளவன், தன் கைகளைக் கழுவாமல் வேறொருவனைத் தொட்டால், தொடப்பட்டவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.

  24. “ ‘அவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொடுவானானால், அப்பாத்திரம் உடைக்கப்பட வேண்டும். மரப்பாத்திரங்களை எல்லாம் தண்ணீரால் அலசவேண்டும்.

  25. “ ‘அந்தக் கசிவு அவனைவிட்டு நீங்கும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்தமாவதற்கு ஏழுநாள் பொறுத்து, ஏழாம்நாள் தன் உடைகளைக் கழுவி சுத்தமான தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.