Skip to content

Praise பற்றிய பைபிள் வசனங்கள்

490 வசனங்கள் · 106 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம். யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.

  2. காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.

  3. பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.

  4. வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.

  5. நன்றியுடன் அவர்முன் வருவோம்; இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.

  6. வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; நாம் முழங்காலிடுவோம்.

  7. அவரே நம் இறைவன்; நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும் அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம். இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,

  8. யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.

  9. யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள்.

  10. நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.

  11. ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.

  12. மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன.

  13. நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் யெகோவாவுக்கு செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.

  14. யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள்.

  15. அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்.

  16. நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.

  17. பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.

  18. யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; யாழோடும், கீதசத்தத்தோடும்,

  19. எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.

  20. பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர்.

  21. நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; அவர் பரிசுத்தமானவர்.

  22. நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.

  23. நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம். பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.

  24. மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.

  25. யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.