Skip to content

Famine பற்றிய பைபிள் வசனங்கள்

101 வசனங்கள் · 51 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. நான் நாட்டுப்புறத்திற்கு போகையில் வாளினால் கொலையுண்டவர்களைக் காண்கிறேன். பட்டணத்துக்குள் போகையில் பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவையும் காண்கிறேன். இறைவாக்கினரும், ஆசாரியரும் தாங்கள் அறியாத ஒரு நாட்டிற்குப் போய்விட்டார்கள்.”

  2. யெகோவாவே! நீர் யூதாவை முழுவதாகப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? நீர் சீயோனை இகழ்கிறீரோ? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களைத் துன்புறுத்தியிருக்கிறீர்? நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்தோம்; ஆனால் ஒரு நன்மையும் வரவில்லை. குணமாகும் வேளையை எதிர்பார்த்தோம்; ஆனால் பயங்கரம் மட்டுமே காணப்பட்டது.

  3. யெகோவாவே, எங்கள் கொடுமையையும், எங்கள் முற்பிதாக்களின் குற்றத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மெய்யாகவே உமக்கு எதிராகப் பாவம்செய்தோம்.

  4. உமது நாமத்தினிமித்தம் எங்களை வெறுக்காதேயும்; உமது மகிமையான அரியணையைக் கனவீனப்படுத்தாதேயும். நீர் எங்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும். அதை முறித்து விடாதிரும்.

  5. பிறநாட்டினரின் பயனற்ற விக்கிரகங்களில் எதுவும் மழையைப் பெய்யப்பண்ணுமோ? ஆகாயங்கள் தாமாகவே மழையைப் பொழிகின்றனவோ? இல்லை; எங்கள் இறைவனாகிய யெகோவாவே! நீரேதான் அதைச் செய்கிறீர். ஆதலால் எங்கள் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. இதையெல்லாம் செய்கிறவர் நீரே.

  6. அழுகிறதினால் என் கண்கள் மங்கிப்போயிற்று. நான் எனக்குள் வேதனையடைகிறேன். என் இருதயம் தரையிலே ஊற்றப்படுகிறது. ஏனெனில் என் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளும் குழந்தைகளும் பட்டணத்துத் தெருக்களில் மயங்கி விழுந்து கிடக்கிறார்கள்.

  7. அப்பிள்ளைகள் காயமுற்ற மனிதரைப்போல், பட்டணத்து வீதிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள். அவ்வேளையில் அவர்கள் தங்கள் தாயாரிடம், “அப்பமும், பானமும் எங்கே?” எனக்கேட்டு தாயாரின் கைகளில் உயிரை விடுகிறார்கள்.

  8. எருசலேம் மகளே! உனக்கு என்ன சொல்வேன்? உன்னை நான் எதனோடு ஒப்பிடுவேன்? சீயோன் கன்னி மகளே, நான் உன்னைத் தேற்றும்படி எதனுடன் உன்னை ஒப்பிட முடியும்? உன் காயம் கடலைப்போல் ஆழமாயிருக்கிறதே. யார் உன்னைக் குணமாக்க முடியும்?

  9. உனது இறைவாக்கு உரைப்போரின் தரிசனங்கள் பொய்யும் பயனற்றவையுமே; உனது சிறையிருப்பைத் தடுக்கும்படி, அவர்கள் உன் பாவங்களை சுட்டிக்காட்டவில்லை. அவர்கள் உனக்குக் கொடுத்த இறைவாக்குகள் பொய்யும், வழிதவறச் செய்வதுமே.

  10. உன் வழியாய்க் கடந்து போகிறவர்கள் எல்லோரும், உன்னைப் பார்த்து தங்கள் கைகளைத் தட்டுகிறார்கள்; எருசலேம் மகளைப் பார்க்கிறவர்கள் கேலிசெய்து தங்கள் தலைகளை அசைத்துச் சொல்கிறதாவது: “அழகின் நிறைவு என்றும், பூமி முழுவதற்கும் மகிழ்ச்சி என்றும் அழைக்கப்பட்ட நகரம் இதுதானா?”

  11. உன் பகைவர்கள் எல்லோரும், உனக்கெதிராகத் தங்கள் வாய்களை விரிவாகத் திறந்து வசைமொழி கூறுகிறார்கள்; அவர்கள் கேலிசெய்து தங்களுடைய பற்களைக் கடித்துச் சொல்கிறதாவது: “நாங்கள் அவளை விழுங்கிவிட்டோம். இந்த நாளுக்காகவே நாங்கள் காத்திருந்தோம். அதைக் காணவே நாங்கள் உயிரோடிருந்தோம்.”

  12. யெகோவா தாம் திட்டமிட்டதைச் செய்துவிட்டார்; அவர் நீண்ட நாட்களுக்குமுன் நியமனம் செய்த தமது வார்த்தையை, நிறைவேற்றிவிட்டார். எருசலேமை அவர் இரக்கமின்றி கவிழ்த்துப் போட்டார், பகைவன் உன்மேல் இழிவுபடுத்தி மகிழ அவர் இடமளித்தார். அவர் உன் பகைவரின் பெலத்தை ஓங்கச் செய்தார்.

  13. மக்களின் இருதயங்கள் ஆண்டவரை நோக்கிக் கதறுகின்றன. சீயோன் மகளின் மதிலே, உனது கண்ணீர் இரவும் பகலும் ஒரு நதியைப்போல் ஓடட்டும்; உனக்கு ஓய்வு கொடாதே, கண்ணீர்விடாமல் இருக்காதே.

  14. எழும்பு, இரவிலே முதற்சாமத்தில் கதறி அழு, யெகோவாவினுடைய சமுகத்தில் உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று. ஒவ்வொரு தெருவின் முனையிலும், பசியினால் மயங்கி விழும் உனது பிள்ளைகளின் உயிருக்காக அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து.

  15. “யெகோவாவே, கவனித்துப் பாரும்: நீர் யாரையாகிலும் இவ்விதமாய் எப்பொழுதாவது நடத்தியிருக்கிறீரோ? பெண்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை உண்ண வேண்டுமோ? தாங்கள் பராமரித்த வழித்தோன்றல்களை உண்ண வேண்டுமோ? ஆண்டவரின் பரிசுத்த இடத்தில் ஆசாரியரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமோ?

  16. “வாலிபரும், முதியோரும் ஒன்றாய் வீதிகளின் புழுதியில் விழுந்து கிடக்கிறார்கள்; வாலிபரும், கன்னிப்பெண்களும் வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். உமது கோபத்தின் நாளிலே அவர்களை வெட்டிப் போட்டீர்; இரக்கமின்றி அவர்களை வெட்டிக் கொன்றீர்.

  17. “ஒரு விருந்து நாளுக்கு அழைப்பதுபோல, திகிலுண்டாகும்படி எல்லாப் பக்கங்களிலும் எதிரிகளை வரவழைத்தீர். யெகோவாவின் கோபத்தின் நாளில் ஒருவனாகிலும் தப்பவுமில்லை, பிழைக்கவுமில்லை; நான் பராமரித்து வளர்த்தவர்களை, என் பகைவன் அழித்துவிட்டான்.”

  18. தாகத்தினால் குழந்தையின் நாவு அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை.

  19. சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள்.

  20. உதவும் கரம் எதுவுமின்றி ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் தண்டனையைவிட, என் மக்களின் தண்டனை பெரிதாயிருக்கிறது.

  21. அவர்களின் இளவரசர்கள் உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன.

  22. ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.

  23. பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள்.

  24. இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, என் மக்கள் அழிக்கப்படுகையில் பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!

  25. நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; எங்கள் விறகும் பணத்திற்கே வாங்கப்படுகிறது.