உள்ளடக்கத்திற்குச் செல்க

Alliance and Society with the Enemies of God பற்றிய பைபிள் வசனங்கள்

229 வசனங்கள் · 51 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏலாமின் வழித்தோன்றலிலிருந்து மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா.

  2. சத்தூவின் வழித்தோன்றலிலிருந்து எலியோனாய், எலியாசீப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா.

  3. பெபாயின் வழித்தோன்றலிலிருந்து யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி.

  4. பானியின் வழித்தோன்றலிலிருந்து மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், யெரேமோத்.

  5. பாகாத் மோவாபின் வழித்தோன்றலிலிருந்து அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே.

  6. ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிம்யோன்,

  7. பென்யமீன், மல்லூக், ஷெமரியா.

  8. ஆசூமின் வழித்தோன்றலிலிருந்து மதனாய், மத்தத்தா, சாபாத், எலிபேலேத், எரெமாயி, மனாசே, சிமெயி

  9. பானியின் வழித்தோன்றலிலிருந்து மாதாயி, அம்ராம், ஊயேல்,

  10. பெனாயா, பெதியா, கெல்லூ,

  11. வனியா, மெரெமோத், எலியாசீப்,

  12. மத்தனியா, மதனாய், யாசாய்,

  13. பின்னூயியின் வழித்தோன்றலிலிருந்து: சிமெயி,

  14. செலேமியா, நாத்தான், அதாயா,

  15. மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,

  16. அசரெயேல், செலேமியா, ஷெமரியா,

  17. சல்லூம், அமரியா, யோசேப்.

  18. நேபோத்தின் வழித்தோன்றலிலிருந்து ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோயேல், பெனாயா என்பவர்கள்.

  19. இவர்கள் எல்லோரும் அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இவர்களில் சிலருக்கு இந்த மனைவிகளின்மூலம் பிள்ளைகளும் இருந்தார்கள்.

  20. சன்பல்லாத்தும், கேஷேமும், “வாரும், ஓனோ நிலத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றில் சந்திப்போம்” என்று எனக்குச் செய்தி அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் எனக்குத் தீமை செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

  21. நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலைத்திட்டத்தை செய்துகொண்டிருக்கிறேன். ஆகையால் நான் வரமுடியாது. நான் அந்த வேலையைவிட்டு உங்களிடம் வருவதால், என் வேலை ஏன் தடையாக வேண்டும்” என்று சொல்லி அனுப்பினேன்.

  22. இதேவிதமாக நான்கு முறைகள் அவர்கள் செய்தி அனுப்பினார்கள். நானும் ஒவ்வொரு தடவையும் அதே பதிலை மீண்டும் கொடுத்தனுப்பினேன்.

  23. இவர்கள் எல்லோரும், தங்களுடைய சகோதரரான உயர்குடி மக்களுடன் சேர்ந்து, இறைவனுடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுக்கப்பட்ட இறைவனின் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள். அத்துடன் எங்கள் ஆண்டவராகிய யெகோவாவினுடைய எல்லாக் கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், ஒழுங்குவிதிகளுக்கும் கவனமாய்க் கீழ்ப்படிவதற்கு சாபத்தினாலும், ஆணையினாலும் தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள்.

  24. “நாங்கள் எல்லோரும், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கவோ, எங்கள் மகன்களுக்கு அவர்கள் மகள்களை எடுக்கவோமாட்டோம் எனவும் வாக்குறுதி செய்கிறோம்.

  25. “அயலிலுள்ள மக்கள் கூட்டங்கள் ஓய்வுநாளில் தங்கள் வியாபாரப் பொருட்களையோ, அல்லது தங்கள் தானியங்களையோ விற்பதற்காகக் கொண்டுவந்தால், அவர்களிடமிருந்து அதை நாங்கள் ஓய்வுநாளிலோ, எந்த பரிசுத்த நாளிலோ வாங்கமாட்டோம். அதைவிட ஏழு வருடங்களுக்கு ஒருமுறை எங்கள் நிலத்தை பண்படுத்தாமல் விட்டுவிடுவதுடன், கொடுத்த கடன்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடுவோம் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம்.