உள்ளடக்கத்திற்குச் செல்க

Alliance and Society with the Enemies of God பற்றிய பைபிள் வசனங்கள்: Are ensnaring

5 வசனங்கள் · 51 அம்சங்கள்

Are ensnaring பற்றிய வசனங்கள்

  1. உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.

  2. ஏனெனில் அவர்கள் பேயோரை வழிபடச்செய்ததிலும், மீதியானியத் தலைவனுடைய மகளும், தங்கள் சகோதரியுமான கஸ்பியின் மூலமாகவும் உங்களை வஞ்சித்தார்கள். பேயோர் வழிபாட்டில் நீங்கள் இணைந்ததினால் கொள்ளைநோய் வந்தபோது, கொல்லப்பட்ட பெண்ணும் இவளே. இவற்றிலெல்லாம் அவர்கள் உங்களைப் பகைவர்களாகவே நடத்தினார்கள்” என்றார்.

  3. அவர்கள் அழிக்கப்பட்ட பின்பும் நீங்கள் கவனமாய் இருங்கள். “இந்த நாடுகள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படிப் பணிசெய்கிறார்கள்? நாங்களும் அப்படியே செய்வோம்” என்று சொல்லி, அவர்களுடைய தெய்வங்களைப்பற்றி விசாரிப்பதன் மூலம் அவர்களுடைய கண்ணியில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாய் இருங்கள்.

  4. உங்கள் சொந்தச் சகோதரன், உங்கள் மகன், மகள், உங்கள் அன்புக்குரிய மனைவி, உங்கள் நெருங்கிய நண்பன் ஆகியோர், “நாம் போய், வேறு தெய்வத்தை வணங்குவோம் வாருங்கள்” என்று நீங்களோ உங்கள் தந்தையோ அறியாத மற்ற தெய்வங்களைக் குறித்துச் சொல்லி இரகசியமாய் வசீகரிக்கலாம்.

  5. அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்; அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது.