Skip to content

Adultery பற்றிய பைபிள் வசனங்கள்: General references

128 வசனங்கள் · 4 அம்சங்கள்

General references பற்றிய வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆனால் இறைவன் ஒரு இரவில் அபிமெலேக்குவுக்கு கனவில் தோன்றி, “நீ கொண்டுவந்திருக்கும் பெண்ணின் காரணமாக நீ செத்து அழியப்போகிறாய்; அவள் இன்னொருவனுடைய மனைவியாய் இருக்கிறாள்” என்றார்.

  2. ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார்.

  3. விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன; அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி, தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான்.

  4. பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவில் கன்னமிடுகிறார்கள்; வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.

  5. அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது; இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.

  6. “அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்; நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால், அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.

  7. “நான் ஒரு பெண்ணையும் இச்சையுடன் பார்க்கமாட்டேன், என என் கண்களோடு ஒப்பந்தம் செய்தேன்.

  8. “என் உள்ளம் ஒரு பெண்ணால் கவரப்பட்டு, அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,

  9. அப்பொழுது என் மனைவி இன்னொருவனுக்கு மாவரைப்பாளாக; பிற மனிதர்கள் அவளுடன் உறவுகொள்ளட்டும்.

  10. ஏனெனில், அது வெட்கக்கேடான, தண்டிக்கப்படவேண்டிய பாவமாயிருக்கும்.

  11. அது பாதாளம்வரை அழிக்கும் நெருப்பு; அது என் விளைச்சலை வேரோடே பிடுங்கிவிடும்.

  12. ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும்.

  13. தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள்.

  14. அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது.

  15. அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.

  16. ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;

  17. ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.

  18. அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.

  19. அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.

  20. ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.

  21. அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.

  22. இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;

  23. வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.

  24. உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.

  25. அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!