உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 1 நாளாகமம் 27:6சுமார் கி.மு. 1015

    மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான்.

  2. 1 நாளாகமம் 27:7சுமார் கி.மு. 1015

    நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  3. 1 நாளாகமம் 27:8சுமார் கி.மு. 1015

    ஐந்தாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு இராணுவ தளபதியாய் இஸ்ராகியனான சம்கூத் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  4. 1 நாளாகமம் 27:9சுமார் கி.மு. 1015

    ஆறாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  5. 1 நாளாகமம் 27:10சுமார் கி.மு. 1015

    ஏழாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமைச் சேர்ந்த பெலோனியனான ஏலேஸ் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 பேர்கள் இருந்தார்கள்.

  6. 1 நாளாகமம் 27:11சுமார் கி.மு. 1015

    எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  7. 1 நாளாகமம் 27:12சுமார் கி.மு. 1015

    ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  8. 1 நாளாகமம் 27:13சுமார் கி.மு. 1015

    பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர்.

  9. 1 நாளாகமம் 27:14சுமார் கி.மு. 1015

    பதினோராம் மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமியரைச் சேர்ந்த பிரத்தோனியனான பெனாயா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  10. 1 நாளாகமம் 27:15சுமார் கி.மு. 1015

    பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.

  11. 1 நாளாகமம் 27:16சுமார் கி.மு. 1015

    இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா;

  12. 1 நாளாகமம் 27:17சுமார் கி.மு. 1015

    லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா ஆரோனுக்கும்: சாதோக்;

  13. 1 நாளாகமம் 27:18சுமார் கி.மு. 1015

    யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;

  14. 1 நாளாகமம் 27:19சுமார் கி.மு. 1015

    செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;

  15. 1 நாளாகமம் 27:20சுமார் கி.மு. 1015

    எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;

  16. 1 நாளாகமம் 27:21சுமார் கி.மு. 1015

    கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்;

  17. 1 நாளாகமம் 27:22சுமார் கி.மு. 1015

    தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள்.

  18. 1 நாளாகமம் 27:23சுமார் கி.மு. 1015

    “இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான்.

  19. 1 நாளாகமம் 27:24சுமார் கி.மு. 1015

    செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை.

  20. 1 நாளாகமம் 27:25சுமார் கி.மு. 1015

    அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான்.

  21. 1 நாளாகமம் 27:26சுமார் கி.மு. 1015

    நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான்.

  22. 1 நாளாகமம் 27:27சுமார் கி.மு. 1015

    ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான்.

  23. 1 நாளாகமம் 27:28சுமார் கி.மு. 1015

    மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான்.

  24. 1 நாளாகமம் 27:29சுமார் கி.மு. 1015

    சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.

  25. 1 நாளாகமம் 27:30சுமார் கி.மு. 1015

    இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான்.