circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
- லூக்கா 1:27சுமார் கி.மு. 5
ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
- லூக்கா 1:28சுமார் கி.மு. 5
கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
- லூக்கா 1:29சுமார் கி.மு. 5
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
- லூக்கா 1:30சுமார் கி.மு. 5
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
- லூக்கா 1:31சுமார் கி.மு. 5
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
- லூக்கா 1:32சுமார் கி.மு. 5
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
- லூக்கா 1:33சுமார் கி.மு. 5
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான்.
- லூக்கா 1:34சுமார் கி.மு. 5
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
- லூக்கா 1:35சுமார் கி.மு. 5
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
- லூக்கா 1:36சுமார் கி.மு. 5
உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
- லூக்கா 1:37சுமார் கி.மு. 5
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
- லூக்கா 1:38சுமார் கி.மு. 5
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
- லூக்கா 1:39சுமார் கி.மு. 5
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
- லூக்கா 1:40சுமார் கி.மு. 5
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
- லூக்கா 1:41சுமார் கி.மு. 5
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
- லூக்கா 1:42சுமார் கி.மு. 5
உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
- லூக்கா 1:43சுமார் கி.மு. 5
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
- லூக்கா 1:44சுமார் கி.மு. 5
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
- லூக்கா 1:45சுமார் கி.மு. 5
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
- லூக்கா 1:46சுமார் கி.மு. 5
அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
- லூக்கா 1:47சுமார் கி.மு. 5
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
- லூக்கா 1:48சுமார் கி.மு. 5
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
- லூக்கா 1:49சுமார் கி.மு. 5
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
- லூக்கா 1:50சுமார் கி.மு. 5
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
- லூக்கா 1:51சுமார் கி.மு. 5
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.