- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
- லேவியராகமம் 13:21சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அதில் வெண்மையான உரோமம் இல்லாமலும், தோலைவிட ஆழமில்லாமலும், புண் ஆறியுமிருந்தால், அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
- லேவியராகமம் 13:22சுமார் கி.மு. 1490
அது தோலில் பரவுகிறதாய் இருந்தால் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும்.
- லேவியராகமம் 13:23சுமார் கி.மு. 1490
ஆனால் புள்ளி மாறாமலும் பரவாமலும் இருந்தால், அது கொப்பளத்திலிருந்து உண்டான தழும்பு மாத்திரமே. ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
- லேவியராகமம் 13:24சுமார் கி.மு. 1490
“ஒருவனது தோல் வெந்து, வெந்ததினால் வெடித்தசதையில் வெண்சிவப்பான அல்லது வெண்மையான புள்ளி தோன்றினால்,
- லேவியராகமம் 13:25சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அந்தப் புள்ளியைப் பரிசோதிக்க வேண்டும். அதிலுள்ள உரோமம் வெண்மையாகி, அந்தப்புண் தோலைவிட ஆழமாகக் காணப்பட்டால், அதுவும் வெந்துபோனதிலிருந்து தோன்றிய தொற்று வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதி ஆகும்.
- லேவியராகமம் 13:26சுமார் கி.மு. 1490
ஆனால் ஆசாரியன் அதைப் பரிசோதித்துப் பார்த்து, அந்தப் புள்ளியில் வெண்மையான உரோமம் இல்லாமலும், அது தோலைவிட ஆழமில்லாமலிருந்து, புண் ஆறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.
- லேவியராகமம் 13:27சுமார் கி.மு. 1490
ஏழாம்நாளில் ஆசாரியன் அவனை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்த வியாதி தோலில் பரவியிருக்குமானால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும்.
- லேவியராகமம் 13:28சுமார் கி.மு. 1490
ஆனாலும் அந்தப் புள்ளி மாறாமலும், தோலில் படராமலும் புண் ஆறியிருந்தால், அது வெந்துபோனதினால் உண்டான ஒரு வீக்கமாகும். ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். ஏனெனில், அது வெந்துபோனதினால் உண்டான தழும்பு மாத்திரமே.
- லேவியராகமம் 13:29சுமார் கி.மு. 1490
“ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தலையில் அல்லது நாடியில் புண் ஏற்பட்டால்,
- லேவியராகமம் 13:30சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அந்தப் புண்ணைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலைவிட ஆழமாகக் காணப்பட்டு, அதிலுள்ள உரோமம் மஞ்சள் நிறமாகவும், மெல்லியதாகவும் இருந்தால், அவர்களை அசுத்தமானவர் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அது ஒரு சொறி. தலையிலும், நாடியிலும் உண்டாகிய ஒரு தொற்று வியாதி.
- லேவியராகமம் 13:31சுமார் கி.மு. 1490
ஆனாலும் ஆசாரியன் இந்த விதமான புண்ணை சோதிக்கும்போது, அது தோலைவிட ஆழமில்லாமலும், கருப்பு உரோமம் அவ்விடத்தில் இல்லாமலும் இருந்தால், ஆசாரியன் அந்த நோயுற்றவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும்.
- லேவியராகமம் 13:32சுமார் கி.மு. 1490
ஏழாம் நாளிலே ஆசாரியன் திரும்பவும் அந்தப் புண்ணைப் பார்வையிட வேண்டும். அந்த சொறி தோலில் பரவாமலும், மஞ்சள் நிறமான உரோமம் காணப்படாமலும், தோலைவிட ஆழமாகக் காணப்படாமலும் இருந்தால்,
- லேவியராகமம் 13:33சுமார் கி.மு. 1490
அவன் சொறியுள்ள பகுதி தவிர மற்றப்பகுதிகளை எல்லாம் சிரைத்துக்கொள்ள வேண்டும். பின் ஆசாரியன் பரிசோதனைக்காக இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமைப்படுத்த வேண்டும்.
- லேவியராகமம் 13:34சுமார் கி.மு. 1490
ஏழாம் நாளிலே ஆசாரியன் அந்த சொறியைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலில் பரவாமலும், தோலைவிட ஆழமில்லாமலும் காணப்பட்டால், ஆசாரியன் அவனை சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் சுத்தமாயிருப்பான்.
- லேவியராகமம் 13:35சுமார் கி.மு. 1490
ஆனாலும் அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட்ட பின்னும் சொறி தோலில் பரவினால்,
- லேவியராகமம் 13:36சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தால், ஆசாரியன் மஞ்சள் நிற உரோமத்தைத் தேடிப்பார்க்க வேண்டியதில்லை. அந்த ஆள் அசுத்தமானவனே.
- லேவியராகமம் 13:37சுமார் கி.மு. 1490
ஆனாலும் ஆசாரியன் பார்க்கும்போது, அவனுடைய எண்ணப்படி சொறி மாற்றமடையாமல் அவ்விடத்தில் கருப்பு உரோமம் வளர்ந்திருந்தால், அந்த சொறி குணமாயிற்று. அவன் சுத்தமாய் இருக்கிறான். அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
- லேவியராகமம் 13:38சுமார் கி.மு. 1490
“ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுடைய தோலில் வெண்மையான புள்ளிகள் இருக்கிறபோது,
- லேவியராகமம் 13:39சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அவர்களைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அப்புள்ளிகளின் நிறம், மங்கிய வெள்ளையாய் இருந்தால் அது தோலில் உண்டான ஒரு தீங்கற்ற ஒரு சிரங்கு வியாதியாகும். அவன் சுத்தமாய் இருக்கிறான்.
- லேவியராகமம் 13:40சுமார் கி.மு. 1490
“ஒரு மனிதன் தலைமயிரை இழந்து மொட்டையாய் இருக்கும்போது அவன் சுத்தமானவன்.
- லேவியராகமம் 13:41சுமார் கி.மு. 1490
அவனுடைய உச்சந்தலையின் முன் பகுதியிலிருந்து மயிர் உதிர்ந்தால், அவனுக்கு இருப்பது மொட்டையான முன்னந்தலை. அவன் சுத்தமானவன்.
- லேவியராகமம் 13:42சுமார் கி.மு. 1490
ஆனால் அவனுடைய மொட்டைத்தலையில் அல்லது நெற்றியில் வெண்சிவப்பான புண் இருந்தால், அது அவனுடைய தலையில் அல்லது நெற்றியில் உண்டான தொற்று வியாதியாகும்.
- லேவியராகமம் 13:43சுமார் கி.மு. 1490
ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அவனுடைய தலையிலோ நெற்றியிலோ உள்ள வீங்கிய புண், ஒரு தொற்றும் தோல்வியாதிபோல் வெண்சிவப்பு நிறமாக இருந்தால்,
- லேவியராகமம் 13:44சுமார் கி.மு. 1490
அவன் நோயுற்று அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய புண்ணின் நிமித்தம் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
- லேவியராகமம் 13:45சுமார் கி.மு. 1490
“அப்படிப்பட்ட தொற்று வியாதியுடைய ஆள், கிழிந்த உடைகளை உடுத்தவேண்டும். அவன் தன் தலைமயிரைக் குழப்பி, தன் முகத்தின் கீழ்ப்பகுதியை மூடிக்கொண்டு, ‘அசுத்தம், அசுத்தம்’ என சத்தமிடவேண்டும்.