உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. லேவியராகமம் 13:46சுமார் கி.மு. 1490

    அந்தத் தொற்று வியாதி அவனுக்கு இருக்குமட்டும் அவன் அசுத்தமானவனாய் இருப்பான். அவன் தனிமையாய் வாழவேண்டும். முகாமுக்கு வெளியே வசிக்கவேண்டும்.

  2. லேவியராகமம் 13:47சுமார் கி.மு. 1490

    “ஏதாவது பூஞ்சணத்தினால் உடை கறைப்பட்டால், அதாவது கம்பளியாவது, மென்பட்டு உடையாவது,

  3. லேவியராகமம் 13:48சுமார் கி.மு. 1490

    மென்பட்டினாலோ கம்பளியினாலோ நெய்யப்பட்ட உடையாவது, தோலாவது, தோலினால் செய்யப்பட்ட ஏதாவது பொருளாவது கறைப்பட்டிருந்தால்,

  4. லேவியராகமம் 13:49சுமார் கி.மு. 1490

    அந்த உடையிலோ, தோலிலோ, நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலினால் செய்யப்பட்ட பொருளிலோ, உள்ள கறை பச்சையாகவோ, சிவப்பாகவோ இருந்தால் அது பரவும் பூஞ்சணமாகும். அதை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும்.

  5. லேவியராகமம் 13:50சுமார் கி.மு. 1490

    ஆசாரியன் அந்த பூஞ்சணத்தைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பொருட்களை ஏழுநாட்களுக்குப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.

  6. லேவியராகமம் 13:51சுமார் கி.மு. 1490

    ஏழாம்நாளில் அவன் அதைப் பரிசோதிக்க வேண்டும். உடையிலோ, நெய்யப்பட்ட துணியிலோ, தோலினால் செய்யப்பட்ட பொருட்களிலோ, தோலிலோ அவை எதற்கு பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் பூஞ்சணம் படர்ந்திருந்தால், அது அழிவை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அப்பொருள் அசுத்தமானது.

  7. லேவியராகமம் 13:52சுமார் கி.மு. 1490

    எனவே ஆசாரியன் கறைப்பட்ட உடையையோ, கம்பளியினால் அல்லது மென்பட்டினால் நெய்யப்பட்டதையோ அல்லது பின்னப்பட்ட உடையையோ, தோல் பொருட்களோ அவைகளை எரிக்கவேண்டும். ஏனெனில், அந்த பூஞ்சணம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே அப்பொருள்கள் எரிக்கப்படவேண்டும்.

  8. லேவியராகமம் 13:53சுமார் கி.மு. 1490

    “ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, உடையிலோ அல்லது நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலிலோ பூஞ்சணம் படராதிருந்தால்,

  9. லேவியராகமம் 13:54சுமார் கி.மு. 1490

    கறைபட்ட அப்பொருள் கழுவப்படும்படி ஆசாரியன் உத்தரவு கொடுக்கவேண்டும். அதன்பின் இன்னும் ஏழுநாட்களுக்கு அவன் அதைப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.

  10. லேவியராகமம் 13:55சுமார் கி.மு. 1490

    பாதிக்கப்பட்ட பொருள் கழுவப்பட்ட பின், ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்த பூஞ்சணம் படராதிருந்தாலும், அதனுடைய தோற்றத்தில் மாற்றமடையாதிருந்தால் அது அசுத்தமானதே. அந்த பூஞ்சணம் எந்த ஒரு பக்கத்தைப் பாதித்திருந்தாலும், அது நெருப்பினால் எரிக்கப்படவேண்டும்.

  11. லேவியராகமம் 13:56சுமார் கி.மு. 1490

    ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அப்பொருள் கழுவப்பட்ட பின்பு பூஞ்சணம் மங்கியிருந்தால், அது காணப்பட்ட அந்த இடத்தை தோல் பொருளிலிருந்தோ, உடையிலிருந்தோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியிலிருந்தோ அவன் அதை கிழித்தெடுக்க வேண்டும்.

  12. லேவியராகமம் 13:57சுமார் கி.மு. 1490

    ஆனால் அந்தப் பூஞ்சணம் உடையிலோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட பொருளிலோ, அல்லது தோல் பொருளிலோ திரும்பவும் தோன்றினால், அது படருகின்றது. எனவே பூஞ்சணம் பிடித்த எதுவும் நெருப்பினால் எரிக்கப்படவேண்டும்.

  13. லேவியராகமம் 13:58சுமார் கி.மு. 1490

    உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ, தோல் பொருளோ கழுவப்பட்டுப் பூஞ்சணம் நீக்கப்பட்டதாயிருந்தால், அது திரும்பவும் கழுவப்பட வேண்டும். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.”

  14. லேவியராகமம் 13:59சுமார் கி.மு. 1490

    கம்பளியினால் அல்லது மென்பட்டினாலான உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ அல்லது ஏதாவது ஒரு தோல் பொருளோ பூஞ்சணத்தினால் கறைப்பிடித்திருந்தால், அவை சுத்தமோ, அசுத்தமோ என தீர்மானிப்பதற்கான விதிமுறைகள் இவைகளே என்றார்.

  15. லேவியராகமம் 14:1சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது:

  16. லேவியராகமம் 14:2சுமார் கி.மு. 1490

    “நோயுற்ற ஒருவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்படும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்திகரிக்கப்படும் வேளையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவையே:

  17. லேவியராகமம் 14:3சுமார் கி.மு. 1490

    ஆசாரியன் முகாமுக்கு வெளியே சென்று அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோயாளி தனது தொற்றும் தோல்வியாதியிலிருந்து குணமடைந்திருந்தால்,

  18. லேவியராகமம் 14:4சுமார் கி.மு. 1490

    ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக இரண்டு சுத்தமான உயிருள்ள பறவைகளையும், சில கேதுருமரத்தின் கட்டைகளையும், சிவப்புநூல் கற்றைகளையும், ஈசோப்புக் குழையையும் கொண்டுவரும்படி உத்தரவிடவேண்டும்.

  19. லேவியராகமம் 14:5சுமார் கி.மு. 1490

    பின்பு ஒரு மண்பானையிலுள்ள நல்ல தண்ணீரின் மேலாக அந்த பறவைகளில் ஒன்று கொல்லப்படும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும்.

  20. லேவியராகமம் 14:6சுமார் கி.மு. 1490

    அவன் கேதுருமரக்கட்டை, சிவப்புநூல் கற்றை, ஈசோப்புக்குழை ஆகியவற்றுடன் உயிரோடிருக்கும் மற்றப் பறவையையும் எடுத்து, நல்ல தண்ணீரின் மேலாகக் கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தில் அதைத் தோய்க்க வேண்டும்.

  21. லேவியராகமம் 14:7சுமார் கி.மு. 1490

    ஆசாரியன், தொற்று வியாதியிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவன்மேல், ஏழுமுறை இரத்தத்தைத் தெளித்து, அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அதன்பின் அந்த உயிருள்ள பறவையைத் திறந்த வெளியிலே விட்டுவிட வேண்டும்.

  22. லேவியராகமம் 14:8சுமார் கி.மு. 1490

    “சுத்தமாக்கப்பட வேண்டியவன் தன் உடைகளைக் கழுவி, தலைமயிர் முழுவதையும் சிரைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருப்பான். இதன்பின் அவன் தனது முகாமுக்கு வரலாம். ஆனாலும் ஏழுநாட்களுக்கு அவன் தன் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருக்கவேண்டும்.

  23. லேவியராகமம் 14:9சுமார் கி.மு. 1490

    அவன் ஏழாம்நாளில் தன் மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும். தலை, தாடி, புருவம் ஆகியவற்றிலுள்ள உரோமங்களையும், மற்ற இடங்களிலுள்ள உரோமங்களையும் சிரைக்கவேண்டும். தன் உடைகளைத் தண்ணீரில் கழுவி, முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.

  24. லேவியராகமம் 14:10சுமார் கி.மு. 1490

    “எட்டாம் நாளிலே அவன் குறைபாடற்ற இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளையும், ஒரு வயதுடைய குறைபாடற்ற ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையும், ஒரு எப்பா அளவையில் பத்தில் மூன்று பங்கு சிறந்த மாவை எண்ணெய் சேர்த்துப் பிசைந்து அத்துடன் தானியக் காணிக்கையாக ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும்.

  25. லேவியராகமம் 14:11சுமார் கி.மு. 1490

    அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கும் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனையும், அவனுடைய காணிக்கைகளையும் சபைக்கூடார வாசலில் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.