Zebulun
இவ்வாறும் அறியப்படுகிறார்: Zabulon
Zebulun பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அப்பொழுது லேயாள், “இறைவன் எனக்கு ஒரு விலையேறப்பெற்ற வெகுமதியைப் பரிசாகக் கொடுத்தார். நான் ஆறு மகன்களைப் பெற்றபடியால், என் கணவர் இப்பொழுது என்னை மதிப்புடன் நடத்துவார்” என்று சொல்லி அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.
லேயாளின் மகன்கள்: யாக்கோபின் மூத்த மகனான ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள்.
செபுலோனுடைய மகன்கள்: செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
“செபுலோன் கடற்கரையில் குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரை பரந்திருக்கும்.
இசக்கார், செபுலோன், பென்யமீன்,
செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,
செபுலோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர்.
செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன்.
மூன்றாம் நாள் செபுலோன் கோத்திர மக்களின் தலைவனான ஏலோனின் மகன் எலியாப் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
செபுலோன் கோத்திரத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்,
வம்சம் வம்சமாக செபுலோன் சந்ததிகளாவன: சேரேத்தின் மூலமாக செரேத்திய வம்சமும், ஏலோனின் மூலமாக ஏலோனிய வம்சமும், யாலயேலின் மூலமாக யாலயேலிய வம்சமும் வந்தன.
செபுலோன் கோத்திரத்திலிருந்து, தலைவனாக பர்னாகின் மகன் எலிசாப்பான்;
ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும்.
செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது: “செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு. இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.
மூன்றாவது சீட்டு வம்சம் வம்சமாக செபுலோன் கோத்திரத்திற்கு விழுந்தது: அவர்களுடைய சொத்துரிமையின் எல்லை சாரீத் வரை சென்றது.
இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களுமே செபுலோனுக்கு வம்சம் வம்சமாகக் கிடைத்த சொத்துரிமை.
பின்பு எல்லை கிழக்கே பெத் தாகோனை நோக்கித் திரும்பி செபுலோன், இப்தாயேல் பள்ளத்தாக்கைத் தொட்டுச்சென்று வடக்கே பெத் எமேக் நெகியேல் வரை சென்றது. இந்த எல்லையில் இடப்புறமாய் காபூல் இருந்தது.
எல்லை மேற்கே சென்று அஸ்னோத் தாபோர் வழியாகப்போய் உக்கொத்தில் முடிவடைந்தது. தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், கிழக்கே யோர்தானையும் தொட்டுச் சென்றது.
மெராரி சந்ததிகள் வம்சம் வம்சமாக ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களிலிருந்து பன்னிரண்டு பட்டணங்களைப் பெற்றார்கள்.
மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னீம், கர்தா,
அத்துடன் செபுலோன் கோத்திரமும் கித்ரோனிலும் நாகலோனிலும் வாழ்ந்த கானானியரைத் துரத்திவிடவில்லை. கானானியர் செபுலோனியர் மத்தியில் வாழ்ந்தனர். அவர்களைக் கட்டாய வேலைசெய்ய கீழ்ப்படுத்தினர்.
அவள் நப்தலியிலிருக்கும் கேதேசிலிருந்து அபினோமின் மகன் பாராக்கை வரவழைத்து அவனிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறதாவது: நீ நப்தலியிலும், செபுலோனிலும் பத்தாயிரம் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவர்களை வழிநடத்தி தாபோர் மலைக்குப்போ.
அங்கே பாராக் செபுலோனியரையும், நப்தலியினரையும் கேதேஸுக்கு வரவழைத்தான். அப்பொழுது பத்தாயிரம் ஆண்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடன் தெபோராளும் சென்றாள்.