உள்ளடக்கத்திற்குச் செல்க

Naphtali

49 வசனங்கள் · 18 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Nephthalim

Naphtali பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அங்கே பாராக் செபுலோனியரையும், நப்தலியினரையும் கேதேஸுக்கு வரவழைத்தான். அப்பொழுது பத்தாயிரம் ஆண்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடன் தெபோராளும் சென்றாள்.

  2. செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர்.

  3. பின்பு அவன் மனாசே நாடு முழுவதற்கும் தூதுவர்களை அனுப்பி அவர்களையும் ஆயுதம் தரிக்கும்படி அழைத்தான். அதோடு ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்களும் அவர்களைச் சந்திக்கப் போனார்கள்.

  4. நப்தலி, ஆசேர், மனாசே ஆகிய இஸ்ரயேலரும் அழைக்கப்பட்டு ஒன்றுகூடினர். அவர்கள் மீதியானியரைத் துரத்திச் சென்றனர்.

  5. அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான்.

  6. இவன் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன். இவனது தகப்பன் தீருவைச் சேர்ந்த ஒரு வெண்கல கைவினை கலைஞன். ஈராம் எல்லா விதமான வெண்கல வேலையையும் செய்யத்தக்க ஞானமும், அறிவும், கைத்திறனும் பெற்றவனாயிருந்தான். இவன் சாலொமோன் அரசனிடம் வந்து அவனுக்குக் குறிக்கப்பட்டிருந்த வேலை முழுவதையும் செய்தான்.

  7. பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவன் ஈயோன், தாண், ஆபேல் பெத்மாக்கா மற்றும் கின்னரோத்தின் எல்லாப் பகுதிகளையும், அத்துடன் நப்தலி நாட்டையும் பிடித்தான்.

  8. இஸ்ரயேலின் அரசன் பெக்காவின் நாட்களில், அசீரிய அரசன் திக்லாத்பிலேசர் என்பவன் படையெடுத்து வந்து தாக்கினான். அவன் ஈயோன், ஆபேல் பெத்மாக்கா, யனோவாக், கேதேசு, ஆத்சோர் ஆகிய பட்டணங்களையும், கீலேயாத், கலிலேயா ஆகிய நாடுகளையும், நப்தலி நாடு முழுவதையும் கைப்பற்றினான். பின்பு அவன் அங்கிருந்த மக்கள் யாவரையும் அசீரியாவுக்கு நாடுகடத்தினான்.

  9. தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.

  10. கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

  11. நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.

  12. நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள்.

  13. நப்தலியின் மனிதரில் 1,000 அதிகாரிகளும், அவர்களுடன் கேடயமும் ஈட்டியும் வைத்திருக்கும் 37,000 பேரும்,

  14. அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று.

  15. செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்;

  16. பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல் மாயீம் பட்டணங்களையும் நப்தலியின் களஞ்சியப் பட்டணங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றினார்கள்.

  17. நப்தலி வரையுள்ள மனாசே, எப்பிராயீம், சிமியோன் பட்டணங்களிலும் அவற்றைச் சுற்றியிருந்த பாழிடங்களிலும் இப்படிச் செய்தான்.

  18. சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.

  19. ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.

  20. நப்தலி ஒரு பங்கைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஆசேரின் எல்லையோடு அமையும்.

  21. மனாசே ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள நப்தலியின் எல்லையோடு அமையும்.

  22. நீளம் 4,500 முழமான மேற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் காத் வாசல், ஆசேர் வாசல், நப்தலி வாசல் எனப் பெயரிடப்படும்.

  23. அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.

  24. “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,