உள்ளடக்கத்திற்குச் செல்க

Manasseh

109 வசனங்கள் · 6 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Manasses

Manasseh பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. பென் கேபேர், ராமோத் கீலேயாத்தில் ஆளுநர். இந்தப் பகுதியில் கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனான யாவீரின் குடியிருப்புகளோடு பாசானிலுள்ள அர்கோப்பின் பகுதிகளும், அதைவிட மதிலால் சூழப்பட்ட வெண்கல தாழ்ப்பாள்களையுடைய அறுபது பட்டணங்களும் அடங்கியிருந்தன.

  2. ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரில் போர் செய்யக்கூடியவர்கள் 44,760 பேர் இருந்தார்கள். இவர்கள் கேடயமும் வாளும் ஏந்தியும், வில்கொண்டும் போரிடுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்ட பலமிக்க மனிதராயிருந்தார்கள்.

  3. மனாசேயின் பாதிக் கோத்திரம் எண்ணிக்கையில் பெருகியிருந்தது. இவர்கள் பாசான் தொடங்கி பாகால் எர்மோன் வரையும், அதாவது சேனீர் எர்மோன் வரையும் குடியிருந்தனர். இவை எர்மோன் மலையென்றும் அழைக்கப்பட்டன.

  4. எனவே இஸ்ரயேலின் இறைவன், தில்காத்பில்நேசர் என அழைக்கப்படும் அசீரிய அரசனான பூலின் ஆவியைத் தூண்டிவிட்டார். அவன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோரை நாடுகடத்தினான். அவன் அவர்களை ஆலா, ஆபோர், ஆரா, கோசான் நதிக்கரை ஆகிய இடங்களுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் இன்னும் அங்கேயே வாழ்கின்றனர்.

  5. மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

  6. கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

  7. எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன.

  8. கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.

  9. மனாசேயின் சந்ததிகள்: அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.

  10. ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.

  11. அதோடு மனாசேயின் எல்லையிலிருந்து பெத்ஷான் முழுவதும் தானாகு, மெகிதோ, தோர் ஆகிய இடங்களும், அவற்றுடன் அவற்றின் கிராமங்களும் அவர்களின் குடியிருப்பாயிருந்தன. இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் சந்ததிகள் இந்தப் பட்டணங்களில் வாழ்ந்துவந்தார்கள்.

  12. யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன:

  13. தாவீது பெலிஸ்தியருடன் சேர்ந்து சவுலுக்கெதிராகச் சண்டையிடப் போகையில், மனாசேயின் மனிதர்களில் சிலரும் வந்து சேர்ந்துகொண்டார்கள். ஆனால் தாவீதும் அவனுடைய மனிதரும் பெலிஸ்தியருக்கு உதவிசெய்யவில்லை. ஏனெனில் பெலிஸ்தியர்களின் தலைவர்கள் கலந்தாலோசித்து தங்களிடமிருந்து தாவீதை அனுப்பிவிட்டார்கள். “தாவீது தமது தலைவன் சவுலுடன் சேர்ந்துகொண்டால், நமது உயிருக்குத்தான் ஆபத்து” என எண்ணியே அப்படிச் செய்தார்கள்.

  14. பின்பு தாவீது சிக்லாசுக்குப் போகையில் மனாசேயைவிட்டு அவனுடன் சேர்ந்துகொண்ட மனாசேயின் மனிதர்கள்: அத்னாக், யோசபாத், எதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்தாய் என்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மனாசேயில் ஆயிரம்பேருக்குத் தலைவர்களாயிருந்தனர்.

  15. மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் தாவீதை அரசனாக்குவதற்கு வரும்படி பெயர் குறிக்கப்பட்டவர்கள் 18,000 பேர்.

  16. யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் எல்லாவித ஆயுதங்களையும் தாங்கியவர்கள் 1,20,000 பேர்.

  17. எரியாவுக்கு ஆற்றல்மிக்க குடும்பத் தலைவர்களான உறவினர் 2,700 பேர் இருந்தனர். இவர்களைத் தாவீது அரசன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோருக்கும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும், அரசனுடைய விவகாரங்களுக்கும் பொறுப்பாக வைத்தான்.

  18. எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்;

  19. கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்;

  20. அதன்பின் அவன் யூதா மக்களையும், பென்யமீன் மக்களையும், அவர்களுக்குள்ளே குடியிருந்த எப்பிராயீம், மனாசே, சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்களையும் கூடிவரச் செய்தான். ஏனெனில் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆசாவின் இறைவனாகிய யெகோவா அவனோடிருக்கிறார் என்பதைக் கண்டபோது, இஸ்ரயேலில் இருந்து அவனிடத்திற்கு வந்திருந்தார்கள்.

  21. எசேக்கியா எல்லா இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் ஆட்களை அனுப்பினான், அத்துடன் எப்பிராயீமுக்கும், மனாசேக்கும் கடிதங்களையும் எழுதினான். அதில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாடுவதற்கு எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான்.

  22. அந்தத் தூதுவர்கள் எப்பிராயீம், மனாசே நாடுகளிலும், செபுலோன்வரை பட்டணம் பட்டணமாக போனார்கள். ஆனால் மக்கள் அவர்களை இகழ்ந்து ஏளனம் செய்தனர்.

  23. இருந்தாலும் ஆசேர், மனாசே, செபுலோன் கோத்திரங்களைச் சேர்ந்த சில மனிதர் தங்களைத் தாழ்த்தி எருசலேமுக்குப் போனார்கள்.

  24. எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்களில் அதிகமானோர் தங்களைச் சுத்திகரிக்காமல் இருந்தார்கள். ஆனாலும், எழுதப்பட்டிருக்கிறதற்கு மாறாக அவர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். ஏனெனில் எசேக்கியா அவர்களுக்காக, “நல்லவராயிருக்கிற யெகோவா ஒவ்வொருவரையும் மன்னிப்பாராக.

  25. இவையெல்லாம் முடிந்தபோது அங்கேயிருந்த இஸ்ரயேலர்கள் வெளியே யூதா பட்டணங்களுக்குச் சென்று புனித கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் உயர்ந்த பலிபீடங்களை அழித்து, யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே முழுவதிலுமுள்ள பலிமேடைகளையும் அழித்துப்போட்டார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் அழித்தபின்பு இஸ்ரயேலர் தங்கள் சொந்தப் பட்டணங்களுக்கும் தங்கள் சொந்த உடைமைக்கும் திரும்பினார்கள்.