உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.

  2. யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.

  3. யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.

  4. நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.

  5. தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.

  6. என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.

  7. யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

  8. ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.

  9. தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம். நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.

  10. அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்; என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.

  11. என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில், நீரே என் வழியை அறிகிறவர்; நான் நடக்கும் பாதையில் மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

  12. யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்; “நீரே என் புகலிடம், வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.

  13. நான் உமது பெயரைத் துதிக்கும்படி, என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்; அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம், நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.

  14. தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும், இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.

  15. உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.

  16. நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.

  17. நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.

  18. யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; என் உள்ளம் சோர்ந்துபோகிறது; உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.

  19. காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.

  20. யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.

  21. நீரே என் இறைவன்; ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; உமது நல்ல ஆவியானவர் என்னை நல்வழியில் நடத்துவாராக.

  22. யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.

  23. உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்; என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில் நான் உமது அடியவன்.

  24. தாவீதின் சங்கீதம். என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, அவர் என் கைகளை யுத்தத்திற்கும், என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.

  25. அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, என் அரண், என் மீட்பர், அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம், நாடுகளை அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.