Skip to content

Zechariah பற்றிய பைபிள் வசனங்கள்

36 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏலாமின் வழித்தோன்றலிலிருந்து மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா.

  2. அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மரத்தாலான உயர்ந்த மேடையின்மேல் சட்ட ஆசிரியன் எஸ்றா ஏறி நின்றான். அவனருகில் வலப்பக்கத்தில் மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்கள் நின்றார்கள். இடப்பக்கத்தில் பெதாயா, மீசயேல், மல்கியா, ஆசூம், அஸ்பதனா, சகரியா, மெசுல்லாம் ஆகியோர் நின்றார்கள்.

  3. ஆனால் யூதாவையும், பென்யமீனையும் சேர்ந்த மற்ற மக்களில் சிலர் எருசலேமில் வாழ்ந்தார்கள். எருசலேமில் குடியமர்ந்த யூதாவின் வழிவந்த தலைவர்கள் யாரெனில், அத்தாயா உசியாவின் மகன், உசியா சகரியாவின் மகன், சகரியா அமரியாவின் மகன், அமரியா செபதியாவின் மகன், செபதியா மகலாலெயேலின் மகன், மகலாலேல் பேரேஸின் சந்ததிகளுள் ஒருவன்.

  4. அடுத்து மாசெயா பாரூக்கின் மகன், பாரூக் கொல்லோசேயின் மகன், கொல்லோசே அசாயாவின் மகன், அசாயா அதாயாவின் மகன், அதாயா யோயாரிபின் மகன், யோயாரிபு சகரியாவின் மகன், சகரியா சீலோனின் வழித்தோன்றலில் ஒருவன்.

  5. ஆலய வேலையைச் செய்ய இவர்களது உடன்வேலையாட்களுடன் எல்லாமாக எண்ணூற்று இருபத்திரண்டுபேர் இருந்தனர். அதாயா இவன் எரோகாமின் மகன், எரோகாம் பெலலியாவின் மகன், பெல்லியா அம்சியின் மகன், அம்சி சகரியாவின் மகன், சகரியா பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன்.

  6. இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம்,

  7. அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன்.

  8. அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

  9. அதற்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருக்கும்படி ஆசாரியன் உரியாவையும், எபரேக்கியாவின் மகன் சகரியாவையும் நான் அழைப்பேன் என்றார்.

  10. அப்படியே பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்கள் எல்லோரின் இரத்தப்பழியும் உங்கள்மேல் வரும்; நீதிமானான ஆபேலின் இரத்தம் தொடங்கி, ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நீங்கள் கொலைசெய்த, பரக்கியாவின் மகன் சகரியாவின் இரத்தம் வரைக்கும், எல்லாம் உங்கள்மேல் வரும்.

  11. ஆபேலுடைய இரத்தம் முதல், ஆலயத்தில் பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலைசெய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், இவர்களிடமே கணக்குக் கேட்கப்படும். ஆம், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடமே இவையெல்லாவற்றிற்கும் கணக்குக் கேட்கப்படும்.