The Tribe Of Asher பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
பதினோராம் நாள் ஆசேர் கோத்திர மக்களின் தலைவன் ஓகிரானின் மகன் பாகியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
அவனுடைய காணிக்கையாக நூற்று முப்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித்தட்டும், எழுபது சேக்கல் எடையுள்ள ஒரு தெளிக்கும் வெள்ளிக்கிண்ணமும் இருந்தன. அவை இரண்டுமே பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி இருந்தன. அவை ஒவ்வொன்றும் தானிய காணிக்கைக்காக எண்ணெயுடன் பிசைந்த சிறந்த மாவு நிரப்பப்பட்டு இருந்தது.
அத்துடன் பத்து சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கிண்ணமும் இருந்தது. அது நறுமணத்தூளினால் நிரப்பப்பட்டிருந்தது.
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,
சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதுடைய ஐந்து செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. ஓகிரானின் மகன் பாகியேலின் காணிக்கை இதுவே.
வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்; இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்; பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;
பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்: ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும், மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.
ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.
ஆசேரின் வம்சங்கள் இவைகளே: 53,400 பேர். அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
ஐந்தாம் சீட்டு, வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்திற்கு விழுந்தது.
அவர்களுடைய நிலப்பரப்பு, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
அலம்மேலெக், ஆமாத், மிஷால், ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது. மேற்கு எல்லையானது கர்மேலையும், சீகோர் லிப்னாத்தையும் தொட்டு,
பின்பு எல்லை கிழக்கே பெத் தாகோனை நோக்கித் திரும்பி செபுலோன், இப்தாயேல் பள்ளத்தாக்கைத் தொட்டுச்சென்று வடக்கே பெத் எமேக் நெகியேல் வரை சென்றது. இந்த எல்லையில் இடப்புறமாய் காபூல் இருந்தது.
அதோடு இது அப்தோன், ரேகோப், அம்மோன், கானா மற்றும் பெரிய சீதோன்வரை சென்றது.
தொடர்ந்து இந்த எல்லை ராமாவை நோக்கி, பின் திரும்பி அரணிடப்பட்ட நகரான தீருவுக்குச் சென்றது. அங்கிருந்து ஒசாவை நோக்கித் திரும்பி அக்சீப்,
உம்மா, ஆப்பெக், ரேகோப் ஆகிய பிரதேசத்தில் உள்ள கடலில் முடிவுற்றது. அங்கே இருபத்திரெண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இந்நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சொத்துரிமை.
ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன்.
ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
சோமேரின் மகன்கள்: அகி, ரோகா, எகூபா, ஆராம்.
அவனுடைய சகோதரன் ஏலேமின் மகன்கள்: சோபாக், இம்னா, சேலேஸ், ஆமல்.
சோபாக்கின் மகன்கள்: சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,