உள்ளடக்கத்திற்குச் செல்க

Oil பற்றிய பைபிள் வசனங்கள்

97 வசனங்கள் · 49 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், மனச்சோர்வுக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார். அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக, அவரால் நாட்டப்பட்ட நீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள்.

  2. அவர்கள் வந்து, சீயோன் மலை உச்சியிலிருந்து மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பார்கள். யெகோவாவின் நிறைவான தானியம், புதிய திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் ஆகிய கொடைகளில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் நன்கு நீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப்போல் இருப்பார்கள். இனி ஒருபோதும் துக்கமடையமாட்டார்கள்.

  3. இவ்விதமாய் நீ தங்கத்தினாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்டாய். உன் உடைகள் மென்பட்டும், விலை உயர்ந்ததும், அலங்கரிக்கப்பட்டதுமாய் இருந்தன. சிறந்த மாவும், தேனும், ஒலிவ எண்ணெயும் உனது உணவுகளாயிருந்தன. நீ பேரழகியாகி ஒரு அரசியாக உயர்வடைந்தாய்.

  4. அழகான இருக்கையில் அமர்ந்தாய். அதற்கு முன்னே ஒரு விருந்துக்கான மேஜையை ஆயத்தப்படுத்தி, அத்துடன் எனக்குரியதான வாசனைப் பொருள்களையும் எண்ணெயையும் வைத்தாய்.

  5. “ ‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.

  6. அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்; அவர்களை வெட்கக்கேடான முறையில் கர்ப்பந்தரித்தாள். அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன், அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும், கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருவார்கள்’ என்றாள்.

  7. நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும், நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன் என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள்.

  8. பூமியானது தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றுக்கு மறுமொழி கொடுக்கும்; இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.

  9. எப்பிராயீம் காற்றை மேய்கிறான், நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான். அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்; எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான்.

  10. யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது: “இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்; நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை நிந்தையாக வைக்கமாட்டேன்.

  11. சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்; ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும்.

  12. நீ விதைப்பாய்; ஆனால் அறுவடை செய்யமாட்டாய். நீ ஒலிவ விதைகளைப் பிழிந்தெடுப்பாய்; ஆனால் எண்ணெயையோ பூசிக்கொள்ளமாட்டாய். திராட்சைப் பழங்களையும் நீ பிழிவாய்; ஆனால் இரசத்தையோ நீ குடிக்கமாட்டாய்.

  13. நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன்.

  14. இருநூறு கிலோகிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து நூறு கிலோகிராம் மட்டுமே இருந்தன. திராட்சை ஆலையின் தொட்டிக்கு ஒருவன் ஐம்பது குடங்கள் திராட்சை இரசம் மொள்ள வந்தபோது, அங்கு இருபது குடங்கள் மட்டுமே இருந்தன.

  15. திரும்பவும் நான் அவனிடம், “தங்க நிறமான எண்ணெயை வடியவிடும் தங்கக் குழாய்கள் இரண்டினுடைய அருகில் காணப்படும் ஒலிவமரக் கிளைகள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்றும் கேட்டேன்.

  16. அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

  17. அவர்கள் அநேக பிசாசுகளைத் துரத்தினார்கள்; பல நோயாளிகளுக்கு எண்ணெய் பூசி, அவர்களை சுகப்படுத்தினார்கள்.

  18. நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவள் என் பாதங்களில் நறுமண தைலத்தை ஊற்றினாள்.

  19. அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான்.

  20. “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.

  21. அப்பொழுது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் நறுமணத் தைலத்தில் அரை லிட்டர் கொண்டுவந்து, அதை அவள் இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த நறுமணத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது.

  22. உங்களில் யாராவது வியாதிப்பட்டால், அவன் திருச்சபையின் தலைவர்களை அழைக்கட்டும், தலைவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி, அவனுக்காக மன்றாடுவார்கள்.