circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- எரேமியா 5:22சுமார் கி.மு. 612
நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என் முன்னிலையிலே நீங்கள் நடுங்க வேண்டியதில்லையோ? நானே மணலைக் கடலின் எல்லையாக்கினேன். கடல் கடந்து வரமுடியாத ஒரு நித்திய தடையாக அதை வைத்தேன். அதின் அலைகள் புரண்டு வந்தாலும், அத்தடையை மேற்கொள்ளமாட்டாது. அலைகள் இரைந்தாலுங்கூட அதைக் கடந்து செல்லமாட்டாது.
- எரேமியா 5:23சுமார் கி.மு. 612
ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள இருதயமுடையவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் என் வழியைவிட்டு விலகிப் போய்விட்டார்கள்.
- எரேமியா 5:24சுமார் கி.மு. 612
‘எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே நாங்கள் பயப்படுவோம். அவரே கோடை மழையையும் வசந்த மழையையும் அந்தந்த பருவகாலங்களில் தருகிறவர். ஒழுங்கான அறுவடைக் காலங்களையும் எங்களுக்குத் தவறாது தருகிறவர்’ என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதில்லை.
- எரேமியா 5:25சுமார் கி.மு. 612
உங்கள் கொடுமையான செயல்களே, உங்களுக்கு இவைகள் கிடைக்காதபடி செய்திருக்கின்றன. உங்கள் பாவங்களே, உங்களுக்கு நன்மை வராதபடி தடுத்திருக்கின்றன.
- எரேமியா 5:26சுமார் கி.மு. 612
“என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்; அவர்கள் பறவைகளைப் பிடிக்கக் கண்ணியை வைத்திருக்கும் வேடரைப்போல் இருக்கிறார்கள். மனிதரைப் பிடிப்பதற்காகப் பொறி வைத்திருப்பவர்களைப் போலவும் பதுங்கியிருக்கிறார்கள்.
- எரேமியா 5:27சுமார் கி.மு. 612
பறவைகள் நிறைந்த கூடுகளைப்போல, அவர்கள் வீடுகள் வஞ்சனைகளால் நிறைந்திருக்கின்றன. அவர்கள் செல்வந்தர்களும் செல்வாக்குடையவர்களுமாய் இருக்கிறார்கள்.
- எரேமியா 5:28சுமார் கி.மு. 612
அவர்கள் கொழுமையும் செழுமையுமாயிருக்கிறார்கள். அவர்களுடைய தீய செயல்கள் அளவற்றதாயிருக்கின்றன; தந்தையற்ற பிள்ளைகளின் வழக்கை வெல்லும்படியாக பரிந்து பேசமாட்டார்கள். ஏழைகளின் உரிமைகளுக்காக வாதாடவும் மாட்டார்கள்.
- எரேமியா 5:29சுமார் கி.மு. 612
இதற்காக நான் அவர்களை தண்டிக்க வேண்டாமோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் இப்படிப்பட்டவர்களைப் பழிவாங்க வேண்டாமோ?
- எரேமியா 5:30சுமார் கி.மு. 612
“நாட்டில் பயங்கரமும், அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது:
- எரேமியா 5:31சுமார் கி.மு. 612
இறைவாக்கினர் பொய்யையே இறைவாக்காகச் சொல்கிறார்கள். ஆசாரியரும் தங்கள் சொந்த அதிகாரத்தின்படியே ஆளுகைசெய்கிறார்கள். என் மக்களும் அதையே விரும்புகிறார்கள். ஆயினும் முடிவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
- எரேமியா 6:1சுமார் கி.மு. 612
“பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள். எருசலேமைவிட்டுத் தப்பி ஓடுங்கள்! தெக்கோவாவில் எக்காளத்தை ஊதுங்கள்! பெத்கேரேமில் சைகை காட்டுங்கள்! ஏனெனில் ஒரு பேராபத்து வடக்கிலிருந்து வருகிறது. அது பயங்கர பேரழிவாய் வருகிறது.
- எரேமியா 6:2சுமார் கி.மு. 612
அழகும் மென்மையுமுள்ள சீயோன் மகளை நான் அழிப்பேன்.
- எரேமியா 6:3சுமார் கி.மு. 612
மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள். அவளைச் சுற்றித் தங்கள் கூடாரங்களை அடித்து, அவனவன் தான் தெரிந்துகொண்ட பகுதியில் தன் மந்தைகளை மேய்ப்பான்.”
- எரேமியா 6:4சுமார் கி.மு. 612
“அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள், எழுந்திருங்கள், நண்பகலில் தாக்குவோம். ஆனால் ஐயோ! பகல் வெளிச்சம் மங்குகிறது. அந்திப்பொழுதும் சாய்கிறது.
- எரேமியா 6:5சுமார் கி.மு. 612
ஆகவே எழும்புங்கள். நாம் இரவில் தாக்கி அவளுடைய கோட்டைகளை அழிப்போம்.”
- எரேமியா 6:6சுமார் கி.மு. 612
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “மரங்களை வெட்டி வீழ்த்தி எருசலேமிற்கு எதிராக முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டுங்கள். இந்தப் பட்டணம் தண்டிக்கப்பட வேண்டும்; அது அடக்கு முறையால் நிறைந்திருக்கிறது.
- எரேமியா 6:7சுமார் கி.மு. 612
ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல, அவளிலிருந்து கொடுமை சுரந்துகொண்டே இருக்கிறது. வன்செயலும், அழிவுமே அப்பட்டணத்தின் வீதிகளில் எதிரொலிக்கின்றன; அவளுடைய நோய்களும், காயங்களும் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கின்றன.
- எரேமியா 6:8சுமார் கி.மு. 612
எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி. இல்லாவிட்டால் நான் உன்னைவிட்டுப் போய்விடுவேன், ஒருவரும் அதில் குடியிருக்கமாட்டார்கள். அப்பொழுது உன் நாடு பாழாகும்.”
- எரேமியா 6:9சுமார் கி.மு. 612
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “திராட்சைக்கொடிகளில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களை திரும்ப சேர்த்தெடுப்பதுபோல், இஸ்ரயேலில் மீதியாயிருப்பவர்களை சேர்த்தெடுங்கள். திராட்சைப் பழங்களைச் சேர்க்கிறவனைப்போல, திரும்பவும் கிளைகளுக்கு இடையில் உனது கையைப் போடு.”
- எரேமியா 6:10சுமார் கி.மு. 612
நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்? யார் எனக்குச் செவிகொடுப்பான்? கேட்க முடியாதபடி அவர்களின் காதுகள் மூடப்பட்டிருக்கின்றன. யெகோவாவின் வார்த்தை அவர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. அதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை.
- எரேமியா 6:11சுமார் கி.மு. 612
நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன், என்னால் அதை அடக்கிக்கொண்டிருக்க முடியாது. “அதை வீதிகளில் இருக்கும் பிள்ளைகள் மேலும், ஒன்று கூடியிருக்கும் இளைஞர் மேலும் ஊற்றிவிடு; கணவனும் மனைவியும் முதியவர்களும் வயது சென்றவர்களுங்கூட அதில் அகப்படுவார்கள்.
- எரேமியா 6:12சுமார் கி.மு. 612
அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும். மனைவிகளுங்கூட மற்றவர்களுக்குச் சொந்தமாவார்கள். நாட்டில் குடியிருப்பவர்களுக்கு எதிராக நான் என்னுடைய கையை நீட்டும்போது, இது நிகழும்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
- எரேமியா 6:13சுமார் கி.மு. 612
ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை, எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள்.
- எரேமியா 6:14சுமார் கி.மு. 612
என் மக்களின் கடுமையான காயத்தை, கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். சமாதானம், சமாதானம் என்று சொல்கிறார்கள், ஆனால் சமாதானமோ அங்கே இல்லை.
- எரேமியா 6:15சுமார் கி.மு. 612
அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா? இல்லை, அவர்களுக்குச் சிறிதளவும் வெட்கம் இல்லை; நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். ஆதலால் அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள்; நான் அவர்களைத் தண்டிக்கும்போது, தள்ளுண்டு போவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.