உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 வசனங்கள் · 3 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எசேக்கியேல் 36:2சுமார் கி.மு. 587

    ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ஆகா, முற்காலத்து உயர்ந்த மலைகள் எங்கள் உடைமைகளாயிற்றே என்று பகைவர்கள் உங்களைப் பார்த்துச் சொன்னார்களல்லவோ?” ’

  2. எசேக்கியேல் 36:3சுமார் கி.மு. 587

    ஆகவே மனுபுத்திரனே நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையடித்து, ஒவ்வொரு திசைகளிலுமிருந்து உங்களைப் பின்தொடர்ந்து துரத்தியபடியால், நீங்கள் மற்ற நாடுகளின் உடைமையாகி, மக்களின் தீங்கான பேச்சுக்கும் அவதூறுக்கும் ஆளானீர்கள்.

  3. எசேக்கியேல் 36:4சுமார் கி.மு. 587

    ஆகையால் இஸ்ரயேலின் மலைகளே, ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். மலைகள், குன்றுகள், கணவாய்கள், பள்ளத்தாக்குகள், இடிபாடுகள் ஆகியவற்றிற்கும் உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு, கேலிக்கிடமாக்கப்பட்ட, பட்டணங்களுக்கும் ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.

  4. எசேக்கியேல் 36:5சுமார் கி.மு. 587

    ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் என் பற்றியெரியும் வைராக்கியத்தில் மீதியான நாடுகளுக்கும், முழு ஏதோமுக்கும் விரோதமாகப் பேசினேன். ஏனெனில், என் நாட்டிலுள்ள மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் மகிழ்வோடும், கர்வத்தோடும் என் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொண்டார்கள்.’

  5. எசேக்கியேல் 36:6சுமார் கி.மு. 587

    ஆகவே நீ இஸ்ரயேல் நாட்டைக்குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் பிறநாட்டினரின் அவமானத்தைச் சுமந்தபடியினால், நான் எனது வைராக்கியத்தினாலும், கடுங்கோபத்தினாலும் பேசுகிறேன்.

  6. எசேக்கியேல் 36:7சுமார் கி.மு. 587

    ஆகவே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உண்மையாகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் பல நாடுகளும் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய் சுமப்பார்கள் என நான் என் உயர்த்திய கரத்தால் ஆணையிடுகிறேன்.

  7. எசேக்கியேல் 36:8சுமார் கி.மு. 587

    “ ‘ஆனால், இஸ்ரயேலின் மலைகளே, நீங்களோ என் மக்களாகிய இஸ்ரயேலருக்குக் கிளைகளைப் பரப்பி, பழங்களையும் விளைவிப்பீர்கள். ஏனெனில் அவர்கள் சீக்கிரமாக வீடுதிரும்புவார்கள்.

  8. எசேக்கியேல் 36:9சுமார் கி.மு. 587

    பாருங்கள்! நான் உங்களில் அக்கறைகொண்டுள்ளேன். நான் உங்களுக்கு உதவிசெய்ய வருவேன். உங்கள் நிலங்களும் உழப்பட்டு விதைக்கப்படும்.

  9. எசேக்கியேல் 36:10சுமார் கி.மு. 587

    மேலும் நான் உங்களிலுள்ள மக்களையும், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரையும் ஏராளமாகப் பெருகப்பண்ணுவேன். நகரங்கள் குடியிருப்பாகும். இடிபாடுகள் மீண்டும் கட்டப்படும்.

  10. எசேக்கியேல் 36:11சுமார் கி.மு. 587

    உங்களிலுள்ள மனிதர்களையும், மிருகங்களையும் எண்ணிக்கையில் பெருகப்பண்ணுவேன். அவர்கள் விருத்தியுள்ளவர்களாய்ப் பெருகுவார்கள். மிருகங்களும் பெருகும். முன்பு இருந்ததுபோலவே மக்களை உங்களில் குடியிருக்கப்பண்ணி, உங்களை முந்தின சிறப்பைவிட செழிப்புள்ளவர்களாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  11. எசேக்கியேல் 36:12சுமார் கி.மு. 587

    மக்களை, என் மக்களாகிய இஸ்ரயேலரை உங்கள் மேலாக நடக்கும்படி செய்வேன். அவர்கள் உங்களை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீங்கள் அவர்களின் உரிமைச் சொத்தாவீர்கள். இனியொருபோதும் நீங்கள் அவர்களைப் பிள்ளையற்றவர்களாக்க மாட்டீர்கள்.

  12. எசேக்கியேல் 36:13சுமார் கி.மு. 587

    “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் நாடு தனது சொந்த மனிதரை விழுங்கி, “தன் நாட்டைப் பிள்ளையற்றதாக்குகிறது என்பதாக மக்கள் உங்களைக் குறித்துச் சொல்கிறார்கள்”

  13. எசேக்கியேல் 36:14சுமார் கி.மு. 587

    ஆகையால் இனிமேல் நீங்கள் மனிதரை விழுங்கவோ அல்லது உங்கள் நாட்டைப் பிள்ளையற்றதாக்கவோ மாட்டீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  14. எசேக்கியேல் 36:15சுமார் கி.மு. 587

    நான் உங்களை இனிமேல் நாடுகளின் பழிச்சொல்லைக் கேட்கச்செய்யமாட்டேன். மக்கள் கூட்டங்களின் ஏளனத்தால் இனி நீங்கள் வேதனையடைவதுமில்லை. அல்லது உங்கள் நாட்டை நான் விழப்பண்ணப்போவதுமில்லை என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”

  15. எசேக்கியேல் 36:16சுமார் கி.மு. 587

    மீண்டும் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.

  16. எசேக்கியேல் 36:17சுமார் கி.மு. 587

    “மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்கள் தம் சொந்த நாட்டில் வாழும்போது, அவர்கள் அதைத் தங்கள் நடத்தைகளினாலும், செயல்களினாலும் அசுத்தப்படுத்தினார்கள். எனது பார்வையில் அவர்களின் நடத்தை பெண்ணின் மாத விலக்குபோல் இருந்தது.

  17. எசேக்கியேல் 36:18சுமார் கி.மு. 587

    அவர்கள் தங்கள் நாட்டில் இரத்தம் சிந்தியதாலும், நாட்டைத் தங்கள் விக்கிரகங்களால் அசுத்தப்படுத்தியதாலும், நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றினேன்.

  18. எசேக்கியேல் 36:19சுமார் கி.மு. 587

    நான் அவர்களை நாடுகளுக்குள்ளும் சிதறப்பண்ணினேன். அவர்கள் தேசங்களுக்கிடையே கலைந்துபோனார்கள். அவர்கள் நடத்தைகளுக்கும், செயல்களுக்கும் தக்கதாக நான் அவர்களை நியாயந்தீர்த்தேன்.

  19. எசேக்கியேல் 36:20சுமார் கி.மு. 587

    நாடுகளின் மத்தியில் அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் என் பரிசுத்த பெயரை அசுத்தப்படுத்தினார்கள். ஏனெனில் ‘இவர்கள் யெகோவாவினுடைய மக்கள், என்றாலும் இவர்கள் அவருடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது’ என்பதாக அவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டது.

  20. எசேக்கியேல் 36:21சுமார் கி.மு. 587

    இஸ்ரயேல் குடும்பத்தார் சென்றிருந்த நாடுகளின் மத்தியில் அவர்கள் அசுத்தப்படுத்திய எனது பரிசுத்த பெயரைக்குறித்து நான் அக்கறையாயிருந்தேன்.

  21. எசேக்கியேல் 36:22சுமார் கி.மு. 587

    “ஆதலால், இஸ்ரயேல் குடும்பத்திற்கு நீ கூறவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இக்காரியங்களை நான் செய்யப்போவது உங்கள் நிமித்தமல்ல, என் பரிசுத்த பெயரின் நிமித்தமே. என் பெயரையே நீங்கள் போன நாடுகளுக்குள் எல்லாம் அசுத்தப்படுத்தினீர்கள்.

  22. எசேக்கியேல் 36:23சுமார் கி.மு. 587

    நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  23. எசேக்கியேல் 36:24சுமார் கி.மு. 587

    “ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன்.

  24. எசேக்கியேல் 36:25சுமார் கி.மு. 587

    சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன்.

  25. எசேக்கியேல் 36:26சுமார் கி.மு. 587

    நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன்.