- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
- ரோமர் 5:9சுமார் கி.பி. 60
இப்பொழுதோ நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் அவராலே இறைவனுடைய கோபத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!
- ரோமர் 5:10சுமார் கி.பி. 60
நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே, அவருடைய மகனின் மரணத்தினாலே நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், இப்பொழுது இறைவனோடு நாம் ஒப்புரவாயிருக்கையில், கிறிஸ்துவின் ஜீவனினாலே நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!
- ரோமர் 5:11சுமார் கி.பி. 60
அதுமாத்திரமல்ல, இப்பொழுது இறைவனோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய், நாம் இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
- ரோமர் 5:12சுமார் கி.பி. 60
ஒரே மனிதனின் மூலமாகவே உலகத்திற்குள் பாவம் நுழைந்தது. பாவத்தின் வழியாக மரணம் வந்தது. எல்லா மனிதரும் பாவம் செய்ததால், இவ்விதமாய் எல்லா மனிதர்மேலும் மரணம் வந்தது.
- ரோமர் 5:13சுமார் கி.பி. 60
மோசேயின் சட்டம் கொடுக்கப்படும் முன்னதாகவே, பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாதிருந்தபோது, அது பாவமாகக் கருதப்படவில்லை.
- ரோமர் 5:14சுமார் கி.பி. 60
ஆனால், மரணம் ஆதாமின் காலந்தொடங்கி, மோசேயின் காலம்வரை வாழ்ந்தவர்களை ஆளுகை செய்தது. ஆதாமுக்குக் குறிப்பிட்ட கட்டளையை அவன் மீறியதுபோல் பாவம் செய்யாதவர்களையும் மரணம் ஆட்சிசெய்தது. ஆதாமோ வரவிருந்த ஒருவருக்கு மாதிரியானான்.
- ரோமர் 5:15சுமார் கி.பி. 60
ஆனால் இறைவனின் கிருபைவரத்திற்கும் ஆதாமின் மீறுதலுக்கும் பெரிய வித்தியாசமுண்டு. எப்படியெனில் ஒரே மனிதனுடைய மீறுதலின் காரணமாக அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய மகா கிருபையும், இன்னொரு மனிதனாகிய இயேசுகிறிஸ்து என்ற ஒரே மனிதரின் கிருபையினால் நமக்குக் கிடைக்கும் வரமும், அநேகர்மேல் அதிகமாய் நிரம்பி வழிகிறது.
- ரோமர் 5:16சுமார் கி.பி. 60
மேலும் இறைவனுடைய நன்கொடையின் விளைவோ, ஒரு மனிதனுடைய பாவத்தின் விளைவைப் போன்றதல்ல: அந்த நியாயத்தீர்ப்பு ஒரே பாவத்தினிமித்தம் தண்டனையைக் கொண்டுவந்தது; ஆனால் அந்த நன்கொடையோ பல மீறுதல்களை நீக்கி, நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது.
- ரோமர் 5:17சுமார் கி.பி. 60
ஒரே மனிதனின் மீறுதலினாலே, மரணம் ஆளுகை செய்தது. அப்படியானால் இறைவனுடைய கிருபையின் நிறைவைப் பெற்றவர்களும், கிருபைவரத்தின் நீதியைப் பெற்றவர்களும், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனினாலே எவ்வளவாய் வெற்றியுள்ள வாழ்வை வாழ்வார்கள்.
- ரோமர் 5:18சுமார் கி.பி. 60
ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானதுபோல, ஒரு நீதிச் செயலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் வாழ்வைக் கொண்டுவருகிற, நீதிமான்கள் என்ற தீர்ப்பு உண்டானது.
- ரோமர் 5:19சுமார் கி.பி. 60
ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக, எல்லோரும் பாவிகள் ஆக்கப்பட்டார்கள். அதுபோலவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலினாலே, எல்லோரும் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
- ரோமர் 5:20சுமார் கி.பி. 60
அதிகரிக்கும் மீறுதல்களை புரிந்துகொள்ளும்படியாக மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அவரின் கிருபை இன்னும் அதிகமாய்ப் பெருகிற்று.
- ரோமர் 5:21சுமார் கி.பி. 60
மரணத்தின் மூலமாய் பாவம் ஆளுகை செய்தது. அதுபோலவே, கிருபையும் நீதியின் மூலமாய், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக, நித்திய ஜீவனையும் கொண்டுவரும்படி ஆளுகை செய்கிறது.
- ரோமர் 6:1சுமார் கி.பி. 60
ஆகவே, நாம் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படி தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருப்போமா?
- ரோமர் 6:2சுமார் கி.பி. 60
இல்லவேயில்லை; நிச்சயமாய் அப்படி செய்யக்கூடாது. பாவத்திற்கு நாம் இறந்துவிட்டோமே. அப்படியிருக்க, இன்னும் நாம் எப்படி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்?
- ரோமர் 6:3சுமார் கி.பி. 60
கிறிஸ்து இயேசுவில் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட நாம் எல்லோரும், அவருடைய மரணத்துக்குள்தானே திருமுழுக்கைப் பெற்றோம் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?
- ரோமர் 6:4சுமார் கி.பி. 60
பிதா தம்முடைய மகிமையினால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுந்திருக்கச் செய்தார். அதுபோலவே, நாமும் ஒரு புதிதான வாழ்வை வாழும்படிக்கு, திருமுழுக்கின் மூலமாய் மரணத்திற்குள் கிறிஸ்துவுடனே அடக்கம் செய்யப்பட்டோம்.
- ரோமர் 6:5சுமார் கி.பி. 60
இவ்விதமாய், கிறிஸ்துவின் மரணத்தில் இணைந்துகொண்ட நாம், நிச்சயமாகவே அவருடைய உயிர்த்தெழுதலிலும் இணைந்திருப்போம்.
- ரோமர் 6:6சுமார் கி.பி. 60
நம்முடைய பழைய மனித சுபாவம் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டது என்பதை நாம் அறிவோம்; இதனால் பாவத்திற்கு அடிமையாயிருந்த உடல் அதன் வல்லமை இழந்துபோகும்; நாம் இனியொருபோதும் பாவத்திற்கு அடிமை இல்லை.
- ரோமர் 6:7சுமார் கி.பி. 60
ஏனெனில் யாராவது மரித்தால், அவன் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான்.
- ரோமர் 6:8சுமார் கி.பி. 60
இவ்விதமாய், நாம் கிறிஸ்துவோடு மரித்தோமென்றால், நாம் அவருடனேகூட வாழ்வோமென்றும் விசுவாசிக்கிறோம்.
- ரோமர் 6:9சுமார் கி.பி. 60
கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதால், அவர் இனிமேல் இறப்பதேயில்லை. மரணம் அவர்மேல் அதிகாரம் செலுத்தமுடியாது; இதை நாம் அறிவோம்.
- ரோமர் 6:10சுமார் கி.பி. 60
கிறிஸ்து இறந்தபோது, பாவத்தை முறியடிக்க ஒரேமுறை இறந்தார். இப்பொழுது, அவர் வாழ்கின்ற வாழ்வை, இறைவனுக்கென்றே வாழ்கிறார்.
- ரோமர் 6:11சுமார் கி.பி. 60
இவ்விதமாகவே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு இறந்தவர்கள் என்றும், இறைவனுக்காக கிறிஸ்து இயேசுவில் வாழ்கிறவர்கள் என்றும் உறுதியாய் எண்ணிக்கொள்ளுங்கள்.
- ரோமர் 6:12சுமார் கி.பி. 60
எனவே, அழிந்துபோகிற உங்கள் உடலில் பாவம் ஆளுகைசெய்ய இடங்கொடுக்க வேண்டாம், அதனுடைய தீய ஆசைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டாம்.