Skip to content

Elam

14 verses

32.1800, 48.2500 கூகுள் வரைபடத்தில் காண்க

Elam பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அந்நாட்களில் சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு, ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால்

  2. ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால், சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு ஆகிய நான்கு அரசர்களும், மற்ற ஐந்து அரசர்களையும் எதிர்த்துப் போரிட்டார்கள்.

  3. அந்த நாளில் யெகோவா அசீரியா, எகிப்து, பத்ரோஸ் எத்தியோப்பியா, ஏலாம், சிநெயார், ஆமாத், தொலைதூர கடற்தீவுகள் ஆகிய இடங்களிலிருந்து தம் மக்களில் மீதமிருப்பவர்களை மீட்க இரண்டாம் முறையும் தமது கரத்தை நீட்டுவார்.

  4. கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது: துரோகி காட்டிக்கொடுக்கிறான், கொள்ளைக்காரன் கொள்ளையிடுகிறான். ஏலாமே, தாக்கு! மேதியாவே, முற்றுகையிடு! அவள் உண்டுபண்ணிய புலம்பலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.

  5. ஏலாமியர் தமது தேரோட்டிகளோடும், குதிரைகளோடும் தமது அம்புக் கூடுகளை எடுக்கிறார்கள்; கீர் ஊரார் கேடயத்தை வெளியே எடுக்கிறார்கள்.

  6. சிம்ரி, ஏலாம், மேதியா நாடுகளிலுள்ள அரசர்களையும்,

  7. யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், ஏலாமைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே:

  8. சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “பாருங்கள், நான் ஏலாமின் வில்லை முறிப்பேன்; அவர்களின் பலத்தின் ஆதாரத்தையும் முறிப்பேன்.

  9. நான் வானத்தில் நான்கு திசைகளிலிருந்தும், நான்கு காற்றுகளை ஏலாமுக்கு எதிராகக் கொண்டுவருவேன். நான் அவர்களை நான்கு திசைகளிலும் சிதறடிப்பேன். ஏலாம் மக்கள் நாடுகடத்தப்பட்டு போகாத ஒரு நாடும் இருக்கமாட்டாது.

  10. தங்கள் உயிரை வாங்கத் தேடுகிற எதிரிகளுக்கு முன்பாக நான் ஏலாமை நொறுக்குவேன். என்னுடைய கடுங்கோபத்தினால் பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்வரை வாளுடன் அவர்களைப் பின்தொடர்வேன்.

  11. நான் ஏலாமில் என்னுடைய அரியணையை அமைப்பேன்; அதன் அரசர்களையும், அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  12. “ஆனாலும் வரும் நாட்களில், ஏலாமின் செல்வங்களை மீண்டும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  13. “ஏலாம் அங்கே இருக்கிறது. அவள் மக்கள் கூட்டங்கள் எல்லாமே அதன் கல்லறையைச் சுற்றி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே, வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். வாழ்வோரின் நாட்டில் திகிலைப் பரப்பிய அனைவருமே, விருத்தசேதனமற்றவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள். அவர்கள் குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.

  14. என்னுடைய தரிசனத்தில் நான் ஏலாம் மாகாணத்திலுள்ள, அரண்செய்யப்பட்ட சூசா பட்டணத்தில் இருந்தேன். அந்தத் தரிசனத்தில் நான் ஊலாய் என்னும் கால்வாய் அருகில் இருக்கக் கண்டேன்.