- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
David
David பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான்.
பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான்.
தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான்.
அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான்.
தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன்.
பின்னர் தாவீது தனது மகன் சாலொமோனுக்கு உதவிசெய்யும்படி, இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
தாவீது வயதுசென்று முதியவனானபோது, தனது மகன் சாலொமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினான்.
அதோடு நாலாயிரம்பேர் வாசல் காவலர்களாகவும், மற்ற நாலாயிரம்பேர் நான் யெகோவாவைத் துதிப்பதற்கென செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும்” என்றான்.
பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான்.
அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார்.
தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே.
எலெயாசாரின் வழித்தோன்றலான சாதோக்கின் உதவியுடனும், இத்தாமாரின் வழித்தோன்றலான அகிமெலேக்கின் உதவியுடனும் நியமிக்கப்பட்ட பணியைச் செய்வதற்கென, தாவீது அவர்களைப் பிரிவுகளாகப் பிரித்தான்.
இவர்களும் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர் செய்ததுபோல, அரசன் தாவீது முன்பும், சாதோக்குக்கும், அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களுக்கும், லேவியருக்கும் முன்பாகத் தங்கள் பணிகளுக்காக சீட்டுப்போட்டார்கள். மூத்த சகோதரனின் குடும்பங்களும், இளைய சகோதரனின் குடும்பங்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டன.
மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:
செலோமித்தும், அவனுடைய உறவினர்களும் தாவீது அரசனால் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். இவை குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆயிரம்பேரின் தளபதிகளினாலும், நூறுபேரின் தளபதிகளினாலும், மற்ற தளபதிகளினாலும் அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களும் இருந்தன.
எப்ரோனியருக்கு அவர்களுடைய குடும்ப வம்சவரலாற்று பதிவேட்டின்படி யெரியா தலைவனாயிருந்தான். தாவீதின் அரசாட்சியின் நாற்பதாவது வருடத்தில் பதிவேடுகள் ஆராயப்பட்டன. அப்போது எப்ரோனியர் மத்தியில் கீலேயாத்திலுள்ள யாசேர் என்னும் இடத்தில் ஆற்றல்மிக்க மனிதர்கள் இருப்பதைக் கண்டனர்.
எரியாவுக்கு ஆற்றல்மிக்க குடும்பத் தலைவர்களான உறவினர் 2,700 பேர் இருந்தனர். இவர்களைத் தாவீது அரசன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோருக்கும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கும், அரசனுடைய விவகாரங்களுக்கும் பொறுப்பாக வைத்தான்.
யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;
“இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான்.
செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை.
ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர்.
தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான்.
தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான்.
அப்பொழுது அரசன் தாவீது எழுந்து நின்று, “எனது சகோதரரே, எனது மக்களே, எனக்கு செவிகொடுங்கள். நான் ஒரு வீட்டைக் கட்டி அதை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கான தங்குமிடமாகவும், இறைவனின் பாதபடியாகவும் செய்ய என் மனதில் நினைத்திருந்தேன். அதைக் கட்டவேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.