உள்ளடக்கத்திற்குச் செல்க

Prophets பற்றிய பைபிள் வசனங்கள்

655 வசனங்கள் · 128 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. பகல் வேளையிலே அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், நாடுகடத்தப்படுவதற்காக நீ ஆயத்தப்படுத்திய உன் உடைமைகளை வெளியே எடுத்து வா. அதன்பின் மாலை வேளையிலே அவர்கள் முன்னிலையில் நாடுகடத்தப்பட்டுப் போகிறவர்கள்போலப் புறப்படு.

  2. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலே, சுவரில் ஒரு துளையிட்டு அதின் வழியாக உனது பயண பொருட்களை வெளியே கொண்டுபோக வேண்டும்.

  3. இருள்சூழும் வேளையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவைகளை உன் தோள்மீது வைத்தபடி கொண்டுபோ. நாட்டைப் பார்க்க முடியாதபடி நீ உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் உன்னை ஒரு அடையாளமாக்கியிருக்கிறேன்” என்றார்.

  4. எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட எனது உடைமைகளை, பகல் வேளையிலே வெளியே கொண்டுவந்து வைத்தேன். பின்பு மாலைவேளையில் எனது கைகளினால் சுவரில் துவாரமிட்டேன். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் இருள்சூழும் வேளையிலே, அதை வெளியே எடுத்து என் தோள்மீது வைத்துக்கொண்டு போனேன்.

  5. “மனுபுத்திரனே, ஒரு விடுகதையை ஆயத்தப்படுத்தி, நீ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஒரு உவமையைச் சொல்

  6. நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஒரு பெரிய கழுகு லெபனோனுக்கு வந்தது. அது பெரிய இறகுகளையும், நீண்ட இறகுகளையும், பலவர்ணமுள்ள அடர்ந்த இறகுகளையும் உடையதாய் இருந்தது. அது ஒரு கேதுருமரத்தின் உச்சிக்கிளையைப் பிடித்தது.

  7. அது அந்த உச்சியிலுள்ள தளிரைக் கொய்து, வர்த்தகர்களின் நாடொன்றுக்குக் கொண்டுபோய் வியாபாரிகளின் பட்டணமொன்றில் அதை நாட்டியது.

  8. “ ‘அத்துடன் அது உன் நாட்டின் விதைகள் சிலவற்றையும் எடுத்து, வளமிக்க நிலத்தில் விதைத்தது. அதை மிகுந்த தண்ணீரின் ஓரமாய் ஒரு புன்னை மரக்கன்றைப்போல் நாட்டியது.

  9. அது துளிர்த்து, தாழ்ந்து படரும் திராட்சைக்கொடியாகியது. அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேராகத் திரும்பின. அதன் வேர்கள் கீழ்நோக்கிப் போனது. இவ்விதமாய் அது ஒரு திராட்சைக்கொடியாகி கிளைகளைவிட்டுச் செழிப்பான கொப்புகளைப் படரவிட்டது.

  10. “ ‘ஆனால் பெரிய இறகுகளையும், அடர்த்தியான இறகுகளையும் கொண்ட வேறொரு பெரிய கழுகும் அங்கே வந்தது. அப்பொழுது இந்தத் திராட்சைச்கொடி, தான் நாட்டப்பட்ட இடத்திலிருந்து, இந்தக் கழுகுக்கு நேராகத் தன் வேர்களைத் திருப்பிவிட்டது. தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும்படி அக்கழுகை நோக்கித் தன் கிளைகளையும் படரவிட்டது.

  11. அந்தத் திராட்சைக்கொடி கிளைகளைப் பரப்பி, ஒரு சிறந்த திராட்சைக் கொடியாக வளர்ந்து பழம் தரும்படி, அந்த முதலாம் கழுகினால் அதிக தண்ணீர் அருகே நல்ல நிலத்தில் நாட்டப்பட்டிருந்தது அப்படியிருந்தும் அது இரண்டாம் கழுகை நோக்கிச்சென்றது.’

  12. “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: அந்தக் கொடி செழிக்குமோ? அது வேரோடு பிடுங்கப்பட்டு, பழங்களும் முழுவதும் உதிர்த்தப்பட்டு அது பட்டுப்போகாதோ? அதின் இளந்தளிர்கள் எல்லாமே வாடிப்போகும். அதை வேரோடு பிடுங்குவதற்கு பலத்த கைகளோ அதிக ஆட்களோ அவசியமில்லை.

  13. அது இடம் பெயர்த்து திரும்பவும் நாட்டப்பட்டாலும் செழிக்குமோ? கீழ்க்காற்று அதின்மேல் வீசும்போது அது முழுமையாகப் பட்டுப்போகாதோ?’ ” அது நன்றாய் வளர்ந்த இடத்திலேயே அது பட்டுப்போகுமே என்கிறார்.

  14. “ஆகையால் மனுபுத்திரனே, துக்கித்து அழு. உடைந்த உள்ளத்தோடும் கசப்பான துயரத்தோடும் அவர்களுக்கு முன்பாக அழு.

  15. ‘ஏன் அழுகிறாய்?’ என அவர்கள் உன்னைக் கேட்கும்போது, ‘வரப்போகும் செய்திக்காகவே அழுகிறேன். ஒவ்வொரு இருதயமும் உருகும். ஒவ்வொரு கையும் சோர்ந்துபோகும். ஒவ்வொரு ஆவியும் மயங்கும். ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப்போல் ஆகும்.’ அது வருகிறது, நிச்சயமாகவே அது நடக்கும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்.”

  16. அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் நாளில் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:

  17. “மனுபுத்திரனே, இந்தத் தேதியை, இதே நாளைக் குறித்துவை, ஏனெனில் இந்த நாளிலேதான் பாபிலோன் அரசன் எருசலேமை முற்றுகையிடத் தொடங்கினான்.

  18. நீ இந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாருக்கு, ஒரு உவமையைக் கூறி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’ “ ‘சமையல் பானையை அடுப்பிலே வை.’ அதை அடுப்பிலே வைத்து அதற்குள்ளே தண்ணீர் ஊற்று.

  19. இறைச்சித் துண்டுகளையும் காலும் தொடையுமாகிய நல்ல துண்டுகள் அனைத்தையும் அதிலே போடு. நல்ல எலும்புகளால் பானையை நிரப்பு.

  20. மந்தையில் சிறந்த ஆட்டையே தெரிந்தெடு. பானையின் கீழ் விறகுகளையடுக்கி அதிலுள்ள எலும்புகள் வேகும்படி நன்றாகக் கொதிக்க வை.

  21. ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: “ ‘அடிப்பிடித்து நுரை அகலாதிருக்கும் பானைபோல் இருக்கும்,’ இரத்தம் சிந்தும் இந்த எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு! அத்துண்டுகளை ஒவ்வொன்றாக அவை வருகின்ற ஒழுங்குமுறையில் வெளியில் எடுத்து அப்பாத்திரத்தை வெறுமையாக்கு.

  22. “ ‘அவள் சிந்திய இரத்தம் அவள் மத்தியிலே இருக்கிறது. ஏனெனில் அவள் சிந்திய இரத்தத்தைப் பாறையிலே ஊற்றினாள்.’ புழுதி மறைக்கும்படி அவள் அதை நிலத்தில் ஊற்றவில்லை.

  23. எனக்கு கோபமூண்டு, பழிவாங்கும் நோக்கில் அவளது இரத்தம் மறைந்து விடாதபடி, நானே அதைப் பாறையில் ஊற்றினேன்.

  24. ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘இரத்தம் சிந்தும் எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு. நானும் விறகை உயரமாய் அடுக்குவேன்’ ”

  25. எனவே, விறகைக் குவித்து நெருப்பை மூட்டு. இறைச்சியில் வாசனைச் பொருட்களைக் கலந்து நன்றாய்ச் சமை. எலும்புகளைக் கருகவிடு.