உள்ளடக்கத்திற்குச் செல்க

Privileges of Saints பற்றிய பைபிள் வசனங்கள்

91 வசனங்கள் · 36 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தீய மனிதர் என்னை விழுங்கும்படி எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, எனது பகைவரும் விரோதிகளுமான அவர்களே தடுமாறி விழுவார்கள்.

  2. ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், என் இருதயம் பயப்படாது; எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.

  3. நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், அதையே நான் தேடுகிறேன்: நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.

  4. ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.

  5. உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்; யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.

  6. நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.

  7. இறைவனே, நீரே என் அரசன்; யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.

  8. அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாடல். இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.

  9. சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.

  10. ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.

  11. துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.”

  12. நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.

  13. என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் எனக்குரியவருமாய் இருக்கிறார்.

  14. ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்; குற்றமற்றோராய் நடப்போருக்கு அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.

  15. இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு. யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.

  16. நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.

  17. இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.

  18. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், அது உன்னை நெருங்காது.

  19. உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.

  20. “யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,

  21. அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.

  22. நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன்.

  23. இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.

  24. யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.

  25. நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.