உள்ளடக்கத்திற்குச் செல்க

Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்

759 வசனங்கள் · 177 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அதன்பின் மோசே மேஜையை சபைக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குத் திசையில் வைத்தான்.

  2. யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான்.

  3. பின்பு குத்துவிளக்கை சபைக் கூடாரத்தில், மேஜைக்கு எதிரே இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் வைத்தான்.

  4. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான்.

  5. தங்கப் பலிபீடத்தைச் சபைக் கூடாரத்தின் திரைக்கு முன்னால் வைத்தான்.

  6. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான்.

  7. இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான்.

  8. யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகன பலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகன காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் செலுத்தினான்.

  9. பின்பு சபைக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் இடையில் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதற்குள் தண்ணீரை ஊற்றினான்.

  10. மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள்.

  11. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதும் அல்லது பீடத்திற்கு அருகே வரும்போதும் தங்களைக் கழுவிக்கொள்வார்கள்.

  12. பின்பு மோசே இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றி முற்றத்தை அமைத்து, முற்றத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். இவ்வாறு மோசே எல்லா வேலைகளையும் செய்துமுடித்தான்.

  13. அப்பொழுது சபைக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியது.

  14. மேகம் சபைக் கூடாரத்தின்மேல் தங்கியிருந்தபடியாலும், யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் சபைக் கூடாரத்திற்குள் போகமுடியாதிருந்தது.

  15. இஸ்ரயேலரின் பயணங்கள் எல்லாவற்றிலும், இறைசமுகக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் புறப்படுவார்கள்.

  16. மேகம் மேலே எழும்பாதிருந்தால், அது மேலே எழும்பும்வரை புறப்படாதிருப்பார்கள்.

  17. இஸ்ரயேல் மக்கள் பயணம் செய்த காலமெல்லாம் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையில் யெகோவாவின் மேகம் பகல் வேளையில் இறைசமுகக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவுவேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது.

  18. இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது:

  19. “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.

  20. நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.

  21. இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.

  22. “உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;

  23. சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,

  24. யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,

  25. இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,