Skip to content

Hypocrisy பற்றிய பைபிள் வசனங்கள்

246 வசனங்கள் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி, இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்; சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.

  2. அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடுகிறார்கள், அவர்கள் என் வழிகளை அறிவதில் ஆவலுள்ளவர்கள்போல் காட்டுகிறார்கள். இறைவனின் கட்டளைகளைக் கைவிடாமல், சரியானவற்றையே செய்யும் ஒரு நாட்டைப்போல், அவர்கள் தங்களைக் காண்பிக்கிறார்கள். அவர்கள் நேர்மையான தீர்மானங்களை என்னிடம் கேட்கிறார்கள்; இறைவனை நெருங்கிவர விரும்புகிறார்கள்.

  3. ‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள். நீர் அதைக் காணவில்லையா? நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்; நீர் அதைக் கவனிக்கவில்லையா?’ “நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து, உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள்.

  4. உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும், கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது. நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால், உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே.

  5. இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்? அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ? உபவாசம் என்பது துக்கவுடையில், சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா? இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும் அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள்.

  6. காளையைப் பலியிடுகிறவர் மனிதனைக் கொல்லுகிறவராகவும், செம்மறியாட்டுக் குட்டியைப் பலியிடுகிறவர் நாயின் கழுத்தை முறிப்பவராகவும், தானியபலி செலுத்துகிறவர் பன்றியின் இரத்தத்தைப் படைப்பவராகவும், நினைவுப் படையலாகிய தூபங்காட்டுதலைச் செய்கிறவர் விக்கிரகத்தை வணங்குபவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த வழிகளைத் தெரிந்துகொள்கிறார்கள், அவர்களுடைய ஆத்துமா அவர்களுடைய அருவருப்புகளில் மகிழ்ச்சியாயிருக்கின்றன.

  7. ஆகையால், நானும் அவர்களுக்குக் கடும் நடவடிக்கையை தெரிந்துகொண்டு, அவர்கள் பயப்படுகிறவற்றை அவர்கள்மேல் கொண்டுவருவேன். ஏனெனில் நான் அழைத்தபோது ஒருவரும் பதிலளிக்கவில்லை; நான் பேசியபோது ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் எனது பார்வையில் தீமையானவற்றைச் செய்து, நான் விரும்பாத காரியங்களைத் தெரிந்துகொண்டார்கள்.”

  8. யெகோவாவின் வார்த்தைக்கு நடுங்குகிறவர்களே, அவரின் வார்தையைக் கேளுங்கள்: “உங்களை வெறுத்து, எனது பெயரின் நிமித்தம் உங்களை விலக்கி வைக்கின்ற உங்கள் சகோதரர்கள், ‘யெகோவா தமது மகிமையைக் காண்பிக்கட்டும், அப்பொழுது நாம் உங்கள் மகிழ்ச்சியைக் காண்போம்!’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் வெட்கமடைவார்கள்.

  9. இப்படியெல்லாம் இருக்கையில் இஸ்ரயேலுடைய சகோதரியான யூதா என்ற துரோகி, வஞ்சகமாய் என்னிடம் திரும்பி வந்தாளேயல்லாமல், முழுமனதுடன் திரும்பி வரவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  10. யெகோவா என்னிடம் சொன்னதாவது: “துரோகியாகிய யூதாவைப் பார்க்கிலும் உண்மையற்ற இஸ்ரயேல் நீதியுள்ளவளாய் இருக்கிறாள்.

  11. ஆனால் பாருங்கள், நீங்கள் பயனற்ற ஏமாற்று வார்த்தைகளையே நம்புகிறீர்கள்.

  12. “ ‘நீங்கள் திருடுகிறீர்கள், கொலைசெய்கிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், பொய் சத்தியம் பண்ணுகிறீர்கள், பாகாலுக்குத் தூபங்காட்டுகிறீர்கள், நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றுகிறீர்கள்.

  13. பின்பு என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு முன்பாக வந்துநின்று, “நாங்கள் பாதுகாப்பாயிருக்கிறோம்” என்கிறீர்கள். இந்த எல்லா அருவருப்புகளையும் செய்வதற்காகவா நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்?

  14. ஏனெனில் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் என்னை அனுப்பி, ‘எங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும். அவர் எதைக் கூறுகிறாரோ, அதை எங்களிடம் கூறும். நாங்கள் அதைச் செய்வோம்’ என்றெல்லாம் கூறியது ஒரு பெரும் பிழையாகிவிட்டது.

  15. நான் இன்று உங்களுக்கு அவைகளைச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்ன எல்லாவற்றிற்கும் இன்னும் நீங்கள் கீழ்ப்படியவில்லை.

  16. ஆகவே இதை இப்பொழுது நிச்சமாய் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் போய்க் குடியிருக்க விரும்பும் இடத்தில் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்கள் என்கிறார்” என்றான்.

  17. “ ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன்.

  18. நான் அவனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை ஒரு உதாரணமாகவும் ஒரு பழமொழியாகவும் வைத்து, அவனை என் மக்களிலிருந்து முற்றிலும் அகற்றிவிடுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  19. “மனுபுத்திரனே, உன்னைக் குறித்தோ உன் நாட்டு மக்கள், சுவரோரங்களிலும், வீட்டு வாசல்களிலும் ஒன்றுகூடி ‘யெகோவாவிடமிருந்து வந்த வார்த்தையாம்; வந்து கேளுங்கள்’ என்பதாக ஒருவருக்கொருவர் கேலியாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.

  20. என் மக்கள் வழக்கமாய்ச் செய்வதுபோலவே, உன் வார்த்தைகளைக் கேட்பதற்காக உன்னிடம் வந்து உனக்குமுன் இருக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் அவைகளின்படி நடப்பதில்லை. அவர்கள் தங்கள் வாயினால் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயங்களோ நீதியற்ற ஆதாயத்தில் பேராசைகொள்கின்றன.

  21. உண்மையாய் நீயோ அவர்களுக்கு, இனிய குரலுடன் காதல் பாடல்ளைப் பாடி, இசைக் கருவிகளையும் நன்றாய் வாசித்து, அவர்களை மகிழ்விக்கும் ஒருவன்போல் மட்டுமே காணப்படுகிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவைகளின்படி நடப்பதில்லை.

  22. ‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள்.

  23. ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்; அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான்.

  24. உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்; உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை.

  25. தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும், அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும், அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.