உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், நான் தடுமாறுவதில்லை.

  2. யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்;

  3. ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.

  4. யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,

  5. உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

  6. யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.

  7. என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.

  8. தாவீதின் சங்கீதம். யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்?

  9. நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், அதையே நான் தேடுகிறேன்: நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.

  10. ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.

  11. அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.

  12. யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.

  13. என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.

  14. உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். என் இரட்சிப்பின் இறைவனே, என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.

  15. என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.

  16. யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் என்னை நேரான பாதையில் நடத்தும்.

  17. நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.

  18. யெகோவாவுக்குக் காத்திரு; பெலன்கொண்டு தைரியமாயிரு, யெகோவாவுக்கே காத்திரு.

  19. தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் என் கன்மலை, எனக்கு செவிகொடாமல் இருக்கவேண்டாம். நீர் மவுனமாகவே இருப்பீரானால், நான் சவக்குழியில் கிடக்கிறவர்களைப் போலாவேன்.

  20. நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, நான் உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக, என் கைகளை உயர்த்தி இரக்கத்துக்காக நான் கதறுவதைக் கேளும்.

  21. யெகோவாவினுடைய செயல்களுக்கும், அவருடைய கரங்கள் செய்தவற்றுக்கும் அவர்கள் மதிப்புக் கொடாதபடியால், யெகோவா அவர்களை இடித்து வீழ்த்துவார்; மீண்டும் அவர்களை ஒருபோதும் கட்டியெழுப்பமாட்டார்.

  22. யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்; ஏனெனில் இரக்கத்துக்கான எனது கதறலை அவர் கேட்டிருக்கிறார்.

  23. யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரில் நம்பியிருக்கிறது, அவர் எனக்கு உதவி செய்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது; நான் அவருக்குப் பாட்டினால் துதிகளைச் செலுத்துவேன்.

  24. யெகோவா தமது மக்களின் பெலனானவர்; தாம் அபிஷேகித்தவருக்கு இரட்சிப்பின் கோட்டையும் அவரே.

  25. இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி, உமது உரிமைச்சொத்தான அவர்களை ஆசீர்வதியும்; அவர்களுடைய மேய்ப்பராயிருந்து அவர்களை என்றென்றும் தாங்கிக்கொள்ளும்.