உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தாவீதின் சங்கீதம். பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்; அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.

  2. யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.

  3. யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது; மகிமையின் இறைவன் முழங்குகிறார்; பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.

  4. யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது; யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.

  5. யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது; யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.

  6. யெகோவாவினுடைய குரல் மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.

  7. யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது; காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.

  8. யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது. காடுகளை அழித்து வெளியாக்குகிறது; அவருடைய ஆலயத்திலோ அனைவரும், “மகிமை!” என அறிவிக்கிறார்கள்.

  9. யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

  10. யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்; யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.

  11. ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.

  12. என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நீர் என்னை சுகமாக்கினீர்.

  13. யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.

  14. யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.

  15. அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; இரவிலே அழுகை இருந்தாலும், காலையிலோ மகிழ்ச்சி வரும்.

  16. யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, நான் மனம்சோர்ந்து போனேன்.

  17. யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.

  18. “நான் அழிந்து குழிக்குள் போவதால் என்ன பயன்? தூசி உம்மைத் துதிக்குமோ? அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?

  19. யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”

  20. என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.

  21. ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.

  22. பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

  23. உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்; என் புகலிடமான கன்மலையாகவும், என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.

  24. நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.

  25. நீரே என் புகலிடம், ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.