God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, அவை முற்றிலும் நீதியானவை.
அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்; அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு.
தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும்.
விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக. அப்பொழுது நான் குற்றமற்றவனாயும், பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன்.
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக; யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக.
யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்; நமது இறைவனுடைய பெயரில் நாங்கள் வெற்றிக்கொடிகளை உயர்த்துவோம். யெகோவா உன் வேண்டுதல்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பாராக.
நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்: யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார். அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார்.
சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம்.
யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்! நாங்கள் கூப்பிடும்போது எங்களுக்குப் பதில் தாரும்.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர்.
அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர்.
நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர்.
நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர்.
ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் அவர் அசைக்கப்படமாட்டார்.
உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
நீர் வரும் நேரத்தில் அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர்.
உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.
யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.
“காலைப் பெண்மான்” என்ற இராகத்தில் பாடும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமல், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் நீர் பரிசுத்தர்.