உள்ளடக்கத்திற்குச் செல்க

Word of God பற்றிய பைபிள் வசனங்கள்

179 வசனங்கள் · 13 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எனவே மோசே திரும்பிப்போய் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களை வரவழைத்தான். யெகோவா அவர்களுக்குச் சொல்லும்படி அவனுக்குக் கட்டளையிட்ட எல்லா வார்த்தைகளையும் அவர்கள் முன்னிலையில் எடுத்துச்சொன்னான்.

  2. இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்:

  3. அப்பொழுது யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதிவைத்தான். மறுநாள் அதிகாலையில் அவன் எழுந்து, மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் விதமாக பன்னிரண்டு கல் தூண்களை நிறுத்தினான்.

  4. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறி வந்து இங்கேயே இரு. நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.

  5. கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை.

  6. இவ்வாறு சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசி முடித்தபின், இறைவனின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளாலான இரண்டு சாட்சிப்பலகைகளை அவனிடம் கொடுத்தார்.

  7. அந்தக் கற்பலகைகள் இறைவனின் கைவேலையாயிருந்தன. அதில் இறைவனால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

  8. அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார்.

  9. அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான்.

  10. சீனாய் மலையில் யெகோவா தமக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் மோசேயின் மூலம் ஏற்படுத்திய விதிமுறைகளும், சட்டங்களும், ஒழுங்குவிதிகளும் இவையே.

  11. நான் கட்டளையிடும் இவற்றுடன் ஒன்றையும் கூட்டவும் வேண்டாம், ஒன்றையும் குறைக்கவும் வேண்டாம். ஆனால் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.

  12. பாருங்கள், என் இறைவனாகிய யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே, விதிமுறைகளையும் சட்டங்களையும் நான் உங்களுக்குப் போதித்திருக்கிறேன். ஆகவே நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலே அவற்றைப் பின்பற்றுங்கள்.

  13. நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாட்டில் நீங்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும், சட்டங்களையும் உங்களுக்குப் போதிக்கும்படியாக அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.

  14. அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள்.

  15. ஆகையால் நீங்கள், என்னுடைய இந்த வார்த்தைகளை உங்கள் இருதயங்களிலும், உங்கள் மனங்களிலும் பதித்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

  16. அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், முற்றத்தின் வாசல்களிலும் எழுதிவையுங்கள்.

  17. நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றின்படியும் செய்யக் கவனமாயிருங்கள்; அவற்றுடன் ஒன்றையும் கூட்டவோ, அவற்றிலிருந்து ஒன்றையும் குறைக்கவோ வேண்டாம்.

  18. “ஆகவே இந்தப் பாடலை உங்களுக்காக எழுதி அதை இஸ்ரயேலருக்குப் படிப்பித்து அதை அவர்களைப் பாடும்படிசெய், அது அவர்களுக்கு விரோதமாகச் சொல்லப்படும் எனது சாட்சியாக இருக்கும்.

  19. அப்படியே மோசே அந்தப் பாடலை அந்த நாளிலேயே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குப் போதித்தான்.

  20. யெகோவா தமது இறைவாக்கினர் மூலமும், தரிசனம் காண்பவர்கள் மூலமும், “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டு விலகுங்கள். நான் எனது பணியாட்களான இறைவாக்கினர்மூலம் கொடுத்து, உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்ட முழு சட்டத்தின்படி எனது கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளுங்கள்” என்று இஸ்ரயேலையும், யூதாவையும் எச்சரித்தார்.

  21. அப்பொழுது செயலாளராகிய சாப்பான் அரசனிடம் போய், “உம்முடைய அதிகாரிகள் ஆலயத்திலிருந்த பணத்தை எடுத்து யெகோவாவினுடைய ஆலய வேலையை செய்பவர்களிடமும், மேற்பார்வை செய்பவர்களிடமும் ஒப்படைத்துள்ளார்கள்” என்று அறிவித்தான்.

  22. மேலும் செயலாளராகிய சாப்பான், “ஆசாரியன் இல்க்கியா எனக்கு ஒரு புத்தகத்தை தந்திருக்கிறான்” என்று சொல்லி அரசனுக்கு முன்பாக அதை வாசித்தான்.

  23. அந்த சட்டப் புத்தகத்தின் வார்த்தைகளை அரசன் கேட்டபோது, தன் மேலுடையைக் கிழித்தான்.

  24. அதன்பின் அவன் ஆசாரியன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மிகாயாவின் மகன் அக்போருக்கும், செயலாளராகிய சாப்பானுக்கும், அரசனின் உதவியாளன் அசாயாவுக்கும் இந்த உத்தரவைக் கொடுத்தான்:

  25. “நீங்கள் போய், கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதைப் பற்றி, எனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், முழு யூதாவுக்காகவும் யெகோவாவிடம் விசாரித்துக் கேளுங்கள். எங்கள் முற்பிதாக்கள் இந்தப் புத்தகத்திலுள்ள வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனதால், எங்களுக்கு எதிராகப் பற்றியெரியும் யெகோவாவின் கோபம் பெரியதாயிருந்தது. அதில் எங்களுக்கு எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் அவர்கள் நடக்கவில்லை.”