உள்ளடக்கத்திற்குச் செல்க

Beersheba

32 verses · 2 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: Beer-sheba

31.2400, 34.8400 கூகுள் வரைபடத்தில் காண்க

Beersheba பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான்.

  2. யோசபாத் எருசலேமில் குடியிருந்தான். அவன் மறுபடியும் பெயெர்செபா தொடங்கி எப்பிராயீம் மலைநாடு வரையுள்ள மக்களைக் காண்பதற்கு சென்று, அவர்களைத் திரும்பவும் அவர்களின் முற்பிதாக்களின் இறைவனான யெகோவாவின் பக்கமாய் திரும்பச் செய்தான்.

  3. யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் நாற்பதுவருடம் ஆட்சிசெய்தான். அவன் தாயின் பெயர் சிபியாள். அவள் பெயெர்செபாவைச் சேர்ந்தவள்.

  4. அவர்கள் இஸ்ரயேல் முழுவதிலும் பெயெர்செபா தொடங்கி தாண்வரைக்கும் உள்ள மக்களை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கும்படித் தீர்மானித்தார்கள். நீண்டகாலமாக எழுதப்பட்டிருந்தபடி பெருந்தொகையான மக்களால் பஸ்கா கொண்டாடப்படவில்லை.

  5. ஆத்சார்சூவால், பெயெர்செபா, அதன் குடியிருப்புகள்,

  6. சனோவா, அதுல்லாம், அவற்றின் கிராமங்கள், லாகீசு, அதன் வயல்கள், அசேக்கா அதன் குடியிருப்புகள் ஆகியவற்றில் வாழ்ந்தார்கள். ஆகவே இவர்கள் பெயெர்செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசங்களில் வாழ்ந்தார்கள்.

  7. பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலுக்குப் போகாதீர்கள், பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள். கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும், பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,