உள்ளடக்கத்திற்குச் செல்க

Moses

774 வசனங்கள் · 7 குடும்ப உறுப்பினர்கள்

Moses பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யெகோவாவின் கட்டளைப்படியே மோசேயும், ஆரோனும் லேவியரைக் கணக்கிட்டார்கள். அவ்வாறு கணக்கிட்ட அவர்களுடைய வம்சங்களின்படி ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஒவ்வொரு ஆண்களும் உட்பட மொத்தம் 22,000 பேர்கள்.

  2. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய முதற்பேறான இஸ்ரயேலின் ஆண்கள் எல்லோரையும் கணக்கிட்டு, அவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை தயார்செய்ய வேண்டும்.

  3. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேலரின் முதற்பேறுகளைக் கணக்கிட்டான்.

  4. மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  5. எனவே, லேவியரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாயிருந்த இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களிடமிருந்து மீட்புப் பணத்தை மோசே வசூலித்தான்.

  6. மோசே, யெகோவாவின் வார்த்தையால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியே, அந்த மீட்புப் பணத்தை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடுத்தான்.

  7. யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது:

  8. பின்பு யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது:

  9. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  10. மோசேயும், ஆரோனும், சமுதாயத்தின் தலைவர்களும் கோகாத்தியரை அவர்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிட்டார்கள்.

  11. சபைக் கூடாரத்தில் பணிசெய்த கோகாத்திய வம்சங்கள் எல்லோருடைய மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டிருந்தபடியே, மோசேயும் ஆரோனும் அவர்களை எண்ணினார்கள்.

  12. சபைக் கூடாரத்தில் பணிசெய்த கெர்சோன் வம்சத்தைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. மோசேயும் ஆரோனும் யெகோவாவின் கட்டளைப்படியே, அவர்களை எண்ணினார்கள்.

  13. மெராரிய வம்சங்களைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும் அவர்களைக் கணக்கிட்டார்கள்.

  14. இப்படியாக மோசேயும் ஆரோனும், இஸ்ரயேல் தலைவர்களும் லேவியர்கள் எல்லோரையும் அவர்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிட்டார்கள்.

  15. மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய வேலையும், அவனவன் எதைச் சுமப்பது என்பதும் நியமிக்கப்பட்டது. இப்படியாக யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் எண்ணப்பட்டார்கள்.

  16. மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  17. இஸ்ரயேலர் அவ்வாறே அவர்களை முகாமைவிட்டு வெளியே அனுப்பினார்கள். யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.

  18. யெகோவா மோசேயிடம் பேசி,

  19. பின்பு யெகோவா மோசேயிடம்,

  20. யெகோவா மோசேயுடன் பேசி,

  21. பின்பு யெகோவா மோசேயிடம்,

  22. மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்து முடித்தபின், அதையும் அதன் பொருட்களையும், அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான். அத்துடன் அவன் பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம்பண்ணி அர்ப்பணம் செய்தான்.

  23. அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  24. எனவே மோசே அந்த வண்டிகளையும், எருதுகளையும் லேவியரிடம் கொடுத்தான்.

  25. ஏனெனில், “பலிபீடத்தின் அர்ப்பணிப்பிற்காக ஒரு நாளைக்கு ஒரு தலைவனாக தன் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும்” என்று யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தார்.