உள்ளடக்கத்திற்குச் செல்க

Issachar

38 வசனங்கள் · 18 குடும்ப உறுப்பினர்கள்

Issachar பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

  2. கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

  3. இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத்,

  4. இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் ஆகிய நால்வர்.

  5. இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள்.

  6. இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர்.

  7. அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று.

  8. யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி;

  9. எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்களில் அதிகமானோர் தங்களைச் சுத்திகரிக்காமல் இருந்தார்கள். ஆனாலும், எழுதப்பட்டிருக்கிறதற்கு மாறாக அவர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். ஏனெனில் எசேக்கியா அவர்களுக்காக, “நல்லவராயிருக்கிற யெகோவா ஒவ்வொருவரையும் மன்னிப்பாராக.

  10. இசக்கார் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை சிமியோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.

  11. செபுலோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை இசக்காரின் பங்கின் எல்லையோடிருக்கும்.

  12. நீளம் 4,500 முழமான தெற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் சிமியோன் வாசல், இசக்கார் வாசல், செபுலோன் வாசல் எனப் பெயரிடப்படும்.

  13. சிமியோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், லேவி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், இசக்கார் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,