God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அப்பணத்தை இறைசமுகத்தில் வைக்கப்படும் அப்பங்களுக்கும், ஒழுங்கான தானிய காணிக்கைகளுக்கும், தகன காணிக்கைகளுக்கும், ஓய்வுநாளுக்கும், அமாவாசை பண்டிகைகளுக்கும், நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்குமான காணிக்கைகளுக்கும், பரிசுத்த காணிக்கைகளுக்கும், இஸ்ரயேலருக்கான பாவநிவாரண காணிக்கைகளுக்கும் இறைவனின் ஆலய எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்துவதற்குமாகக் கொடுப்போம்.
“ஆசாரியர்கள், லேவியர்கள், மக்கள் ஆகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில், எப்பொழுது எங்கள் குடும்பங்கள் விறகைக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குச் சீட்டுப்போட்டோம். இந்த விறகை மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்குக் கொடுப்போம்.
“அதைவிட எங்கள் விளைச்சலின் முதற்பலனையும், எல்லா மரங்களது முதற்பழங்களையும் வருடாவருடம் யெகோவாவினுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.
“மேலும், மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி, எங்கள் இறைவனின் ஆலயத்தில் பணிசெய்யும் ஆசாரியர்களிடம், எங்கள் முதற்பேறான மகன்களையும், வளர்ப்பு மிருகங்கள், மாட்டு மந்தை ஆட்டு மந்தைகளின் தலையீற்றுகளையும் கொண்டுவருவோம்.
“அத்துடன் எங்கள் இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்திற்கு நாங்கள் அரைத்தமாவின் முதற்பங்கையும், எங்கள் முதல் தானிய காணிக்கைகளையும், எல்லா மரங்களின் பழங்கள், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பங்கையும் ஆசாரியர்களிடம் கொண்டுவருவோம். நாங்கள் வேலைசெய்யும் பட்டணங்களில் லேவியரே பத்திலொரு பங்கைச் சேர்க்கிறவர்களாகையால், எங்களுடைய விளைச்சலின் பத்திலொரு பங்கை நாங்கள் லேவியரிடம் கொண்டுவருவோம்.
லேவியர் தசமபாகத்தை வாங்கும்போது, ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியன் ஒருவர் லேவியருடன் இருக்கட்டும்; லேவியர் அதிலே பத்திலொரு பங்கை இறைவனுடைய ஆலயத்தில் இருக்கும் கருவூலத்திற்குக் கொண்டுவரட்டும்.
லேவியர்கள் உட்பட இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் காணிக்கைகளாகிய தானியங்களையும், புதுத் திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் களஞ்சிய அறைகளுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த அறைகள் பரிசுத்த இடத்தின் பொருட்கள் வைக்கப்படுகிறதும், பணிசெய்யும் ஆசாரியர்கள், வாசற்காவலர், பாடகர் தங்குகிறதுமான அறைகள். “எனவே நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தை அலட்சியம் செய்யமாட்டோம்” என்றார்கள்.
இறைவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனான செராயா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக்கு மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன்.
இறைவனுடைய ஆலயத்தின் வெளிப்புற வேலைகளுக்கு லேவியர்களுக்குத் தலைவர்களான சபெதாயும், யோசபாத்தும் பொறுப்பாயிருந்தார்கள்.
எருசலேமிலிருந்த லேவியருக்கு மேற்பார்வையாளனாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகன், பானி அசபியாவின் மகன், அசபியா மதனியாவின் மகன், மத்தனியா மீகாவின் மகன். ஊசி ஆசாபின் சந்ததிகளில் ஒருவன், ஆசாபின் சந்ததிகளே இறைவனுடைய ஆலய ஆராதனைக்குப் பொறுப்பான பாடகர்களாக இருந்தார்கள்.
அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள்.
சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான்.
நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம்.
இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது.
தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள்.
ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள்.
அதே நாளில் மக்கள் கேட்கும்படியாக மோசேயின் புத்தகம் சத்தமாக வாசிக்கப்பட்டது; அதில், எந்த ஒரு அம்மோனியரும் மோவாபியரும் இறைவனுடைய சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்படக் கூடாது என்று எழுதியிருக்கக் காணப்பட்டது.
ஏனென்றால் அந்த தேசத்தார் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை உணவும் தண்ணீரும் கொண்டுவந்து சந்திக்கவில்லை; ஆனால் அவர்களைச் சபிப்பதற்குப் பிலேயாமை கூலிக்கு அமர்த்தினார்கள். எனினும், எங்கள் இறைவன் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார்.
இதற்கு முன்பு ஆசாரியன் எலியாசீப் எங்கள் இறைவனின் ஆலய களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தான். இவன் தொபியாவின் நெருங்கிய உறவினரான இவன்,
திரும்பி எருசலேமுக்கு வந்தேன். இறைவனுடைய ஆலயத்தின் முற்றத்திலுள்ள ஒரு அறையை எலியாசீப் தொபியாவுக்குக் கொடுத்து செய்திருந்த தீமையான செயலை நான் கண்டுபிடித்தேன்.
அத்துடன் நான் அந்த அறைகளை தூய்மைப்படுத்தும்படி உத்தரவிட்டேன்; இறைவனுடைய ஆலயப் பாத்திரங்களையும், தானிய காணிக்கைகளையும், நறுமண தூபங்களையும் திரும்பவும் அறைக்குள்ளே கொண்டுவந்தேன்.
நான் அதிகாரிகளைக் கடிந்துகொண்டு, “இறைவனுடைய ஆலயம் இவ்வாறு உதாசீனப்படுத்தப்பட்டது ஏன்?” என்று அவர்களைக் கேட்டேன். அப்பொழுது நான் அவர்களைத் திரும்பவும் ஒன்றாய் அழைத்து, அவர்களுக்குரியதான கடமைகளில் அவர்களை அமர்த்தினேன்.
என் இறைவனே, நான் என் இறைவனுடைய ஆலயத்துக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உண்மையாய்ச் செய்த எல்லாவற்றையும் நீக்கிப் போடாமல், இதற்காக என்னை நினைத்தருளும்.
உங்கள் முற்பிதாக்கள் இவ்விதமான செயலைச் செய்ததினால் அல்லவோ இன்று எங்கள்மேலும், எங்கள் நகரத்தின்மேலும் இந்தப் பேரழிவுகளை எங்கள் இறைவன் கொண்டுவந்தார். இப்பொழுது ஓய்வுநாளைத் தூய்மைக்கேடாக்குவதால் இஸ்ரயேலுக்கு எதிராய் கோபத்தை மூட்டுகிறீர்கள்” என்று கடிந்துகொண்டேன்.
அத்துடன் ஓய்வுநாளின் பரிசுத்தத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களை முதலில் சுத்தம்பண்ணிய பின்பே, வாசலைக் காவல்காக்க வரவேண்டுமென லேவியருக்கு நான் கட்டளையிட்டேன். இதற்காகவும் என் இறைவனே, என்னை நினைவில்கொண்டு உமது பெரிதான அன்புக்குத் தக்கதாக எனக்கு இரக்கம் காட்டும்.