Skip to content

Gilead

11 வசனங்கள் · 11 குடும்ப உறுப்பினர்கள்

Gilead பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. மனாசேயின் சந்ததிகள்: மாக்கீரின் மூலமாக மாகீரிய வம்சம் வந்தது. மாகீர், கீலேயாத்தின் தகப்பன் கீலேயாத்தின் வழியாக கீலேயாத்திய வம்சம் வந்தது.

  2. கீலேயாத்தின் சந்ததிகளாவன: ஈயேசேரின் மூலமாக ஈயேசேரியரின் வம்சமும், ஏலேக்கின் மூலமாக ஏலேக்கிய வம்சமும் வந்தன.

  3. செலொப்பியாத்தின் மகள்கள், யோசேப்பின் மகன் மனாசேயின் வம்சங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இந்த செலொப்பியாத் எப்பேரின் மகன். ஏப்பேர் கீலேயாத்தின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். மாக்கீர் மனாசேயின் மகன். செலொப்பியாத்தின் மகள்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோர்.

  4. யோசேப்பின் சந்ததிகளின் வம்சங்களிலிருந்து வந்த, மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் வம்சத்திலிருந்து வந்த குடும்பத் தலைவர்கள் மோசேயிடம் வந்தார்கள். அவர்கள் மோசேயிடமும் இஸ்ரயேல் குடும்பங்களுக்குத் தலைமையாயிருந்த தலைவர்களிடமும் வந்து, அவர்களிடம் பேசினார்கள்.

  5. யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசே கோத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட நிலப்பங்கு இதுவே. இது மனாசேயின் மூத்த மகன் மாகீருக்கே கொடுக்கப்பட்டது. மாகீர் என்பவன் கீலேயாத் மக்களின் முற்பிதா. மாகீர் மக்கள் சிறந்த போர் வீரராயிருந்தபடியால் கீலேயாத், பாசான் ஆகிய பிரதேசங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

  6. செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லை, மகள்களே இருந்தனர், இவன் கீலேயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன், கீலேயாத் மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன், செலொப்பியாத்தின் மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும்.

  7. கீலேயாத்தின் மனைவியும் கீலேயாத்திற்கு மகன்களைப் பெற்றாள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களானபோது யெப்தாவை நோக்கி, “நீ வேறொரு பெண்ணிற்கு பிறந்த மகனாகையால், எங்கள் குடும்ப உரிமைச்சொத்தில் நீ எதையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று கூறி அவனைத் துரத்திவிட்டார்கள்.

  8. பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.

  9. ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.

  10. மனாசேயின் சந்ததிகள்: அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.

  11. ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.