Havvoth-jair
இவ்வாறும் அறியப்படுகிறார்: Havoth-jair, Jair
32.0400, 35.7200 கூகுள் வரைபடத்தில் காண்க
Havvoth-jair பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
மனாசேயின் சந்ததியான யாவீர் என்பவன் கீலேயாத்தியர்களின் கிராமங்களைக் கைப்பற்றி, அவற்றிற்கு அவோத்யாவீர் எனப் பெயரிட்டான்.
மனாசேயின் சந்ததியான யாவீர் என்பவன் கேசூரியர், மாகாத்தியர் ஆகியோருடைய எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினான். அதற்கு அவனுடைய பெயரே இடப்பட்டது. எனவே பாசான் இந்நாள்வரைக்கும் அவோத்யாவீர் என்றே அழைக்கப்படுகிறது.
அவனுக்கு முப்பது மகன்கள் இருந்தார்கள், இவர்கள் முப்பது கழுதைகளில் சவாரி செய்தார்கள். கீலேயாத்தில் இவர்கள் முப்பது பட்டணங்களை நிர்வகித்தார்கள். இக்குடியிருப்புகள் இந்த நாள்வரைக்கும் அவோத்யாவீர், அதாவது யாவீரின் கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.