உள்ளடக்கத்திற்குச் செல்க

Asaph

34 வசனங்கள் · 5 குடும்ப உறுப்பினர்கள்

Asaph பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம். யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.

  2. பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.

  3. மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

  4. ஆசாபின் சங்கீதம். இறைவனே, பிற நாட்டு மக்கள் உமது உரிமைச்சொத்தின்மேல் படையெடுத்தார்கள்; அவர்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்திவிட்டார்கள், அவர்கள் எருசலேமை இடித்துக் கற்குவியலாக்கிவிட்டார்கள்.

  5. “உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே, எங்களுக்குச் செவிகொடும். கேருபீன்களுக்கு இடையில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே,

  6. கித்தீத் என்னும் இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள், யாக்கோபின் இறைவனை சத்தமிட்டு ஆர்ப்பரியுங்கள்.

  7. ஆசாபின் சங்கீதம். மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:

  8. ஆசாபின் பாட்டாகிய சங்கீதம். இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; செவிகொடாமல் இருக்கவேண்டாம்; இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம்.

  9. அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவனிடத்திற்குப் போனார்கள்.