Skip to content

Psaltery பற்றிய பைபிள் வசனங்கள்

21 வசனங்கள் · 3 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.

  2. தாவீதும் எல்லா இஸ்ரயேல் மக்களும் பாடல்களோடும், யாழோடும், மத்தளங்களோடும், கைத்தாளத்தோடும், எக்காளத்தோடும் இறைவனுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் பாடிக் கொண்டாடினார்கள்.

  3. அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான்.

  4. மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:

  5. இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார்.

  6. இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.

  7. தாவீது, அரசனின் தரிசனக்காரனான காத், இறைவாக்கினன் நாத்தான் ஆகியவர்கள் கற்பித்தவிதமாகவே, அரசன் லேவியர்களை கைத்தாளம், யாழ், வீணை ஆகியவற்றுடன் யெகோவாவின் ஆலயத்தில் நிறுத்தினான்; இது யெகோவாவினால் அவரது இறைவாக்கினர்கள் மூலமாய்க் கட்டளையிடப்பட்டிருந்தது.

  8. எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள்.

  9. யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.

  10. என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.

  11. என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; இஸ்ரயேலின் பரிசுத்தரே, யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன்.

  12. இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்; நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள்.

  13. பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.

  14. யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.

  15. இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.

  16. எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.

  17. கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் முதலான எல்லா இசைக்கருவிகளின் சத்தத்தை நீங்கள் கேட்டவுடனே, நீங்கள் எல்லோரும் இங்கு கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தி வைத்திருக்கும் தங்கச் சிலையை வணங்கவேண்டும்.

  18. கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ் ஆகியவற்றின் சத்தத்தையும், எல்லாவித இசைகளையும் கேட்டபோது, எல்லா மக்களும், நாடுகளும், பல்வேறு மொழிகளையும் பேசும் மனிதரும் கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்திய அந்தத் தங்கச் சிலையை வணங்கினார்கள்.

  19. அரசே! கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்றும் எல்லாவித இசையையும் கேட்டதும், எல்லாரும் கீழே விழுந்து தங்கச் சிலையை வணங்கவேண்டும் என்று நீர் கட்டளை பிறப்பித்திருக்கிறீர்.

  20. “இப்பொழுதும் கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்ற எல்லா இசைகளையும் நீங்கள் கேட்கும்போது, கீழே விழுந்து நான் நிறுத்திய சிலையை வணங்கினீர்களென்றால் உங்களுக்கு நல்லது. அப்படி நீங்கள் வணங்காவிட்டால், உடனே பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்படுவீர்கள். அப்பொழுது எனது கையிலிருந்து உங்களை விடுவிக்கிற தெய்வம் எது என்றான்?”

  21. அவர் அதை எடுத்துக்கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீணை வாத்தியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள்; அவை பரிசுத்தவான்களின் மன்றாட்டுகள்.