Skip to content
எண்ணாகமம் 31:14-24

எண்ணாகமம் 31:14-24

14
யுத்தத்திலிருந்து திரும்பி வந்த இராணுவ அதிகாரிகளான ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்குமான தளபதிகளாய் இருந்தவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
15
அவன் அவர்களிடம், “பெண்கள் எல்லோரையும் வாழ அனுமதித்தீர்களோ?
16
பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.
17
எல்லா ஆண்பிள்ளைகளையும் இப்பொழுதே கொல்லுங்கள். ஆணுடன் உடலுறவுகொண்ட ஒவ்வொரு பெண்ணையும் கொல்லுங்கள்.
18
ஆனால் ஆண்களுடன் உடலுறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக விட்டுவையுங்கள்.
19
“யாரையாகிலும் கொன்றவனோ அல்லது கொல்லப்பட்ட எவனையாவது தொட்டவனோ ஏழுநாட்களுக்கு முகாமுக்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் நீங்கள் உங்களையும், உங்கள் கைதிகளையும் சுத்திகரிக்கவேண்டும்.
20
உங்களது எல்லா உடைகளையும், தோலினால் அல்லது வெள்ளாட்டு மயிரினால் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான்.
21
ஆசாரியன் எலெயாசார் யுத்தத்திற்குப் போன இராணுவவீரர்களிடம் சொன்னதாவது, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டத்தின்படி செய்யப்பட வேண்டியதாவது:
22
தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றையும்,
23
நெருப்பினால் எரிந்துபோகாத வேறு எதையும் நெருப்பிலே போடவேண்டும். அப்பொழுது அது சுத்தமாகும். ஆனால் சுத்திகரிக்கும் தண்ணீரினாலும் அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நெருப்பினால் எரியக்கூடிய எதையும் அந்த நீரினால் சுத்திகரிக்கவேண்டும்.
24
ஏழாம்நாளில் நீங்கள் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் சுத்தமாவீர்கள். பின்பு நீங்கள் முகாமுக்குள் வரலாம்” என்றான்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options