1 நாளாகமம் 4:24-43
24
சிமியோனின் சந்ததிகள்: நெமுயேல், யாமின், யாரீப், சேரா, சாவூல்;
25
சாவூலின் மகன் சல்லூம், இவனது மகன் மிப்சாம் இவனது மகன் மிஸ்மா என்பவர்கள்.
26
மிஸ்மாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் அம்முயேல், இவனது மகன் சக்கூர், இவனது மகன் சீமேயி.
27
சீமேயிக்கு பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். ஆனால் இவனது சகோதரர்களுக்கு அநேகம் பிள்ளைகள் இருக்கவில்லை; அதனால் யூதா மக்களைப்போல் இவர்களது முழு வம்சமும் பெருகியிருக்கவில்லை.
28
அவர்கள் பெயெர்செபா, மொலாதா, ஆத்சார்சூவால்,
29
பில்கா, ஏத்சேம், தோலாத்,
30
பெத்துயேல், ஓர்மா, சிக்லாகு,
31
பெத்மார்காபோத், ஆத்சார்சூசிம், பெத்பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்தனர். தாவீது அரசனாகும்வரை இந்தப் பட்டணங்களெல்லாம் அவர்களுக்குரியதாகவே இருந்தன.
32
அவற்றுடன் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆஷான் ஆகிய ஐந்து பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்களும் ஆகும்.
33
இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள் பாகால்வரை பரந்திருந்தது. இந்த இடங்களே அவர்களுடைய குடியிருப்புகள். இவர்கள் தங்கள் வம்சாவழி அட்டவணையும் வைத்திருந்தார்கள்:
34
மெசோபாபு, யம்லேக், அமத்சியாவின் மகன் யோஷா,
35
யோயேல், ஆசியேலின் மகனான செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் யெகூ,
36
அத்துடன் எலியோனாய், யாக்கோபா, யெசொகாயா, அசாயா, ஆதியேல், யெசிமியேல், பெனாயா,
37
செமாயாவின் மகன் சிம்ரி, அவனுடைய மகன் யெதாயா, அவனுடைய மகன் அல்லோன், அவனுடைய மகன் சிப்பி, சிப்பியின் மகனான சீசா ஆகியோருமே.
38
இப்பெயர்களையுடையவர்கள் வம்சங்களில் தலைவர்களாயிருந்தார்கள். இவர்களின் குடும்பங்கள் அதிகமதிகமாய்ப் பெருகின.
39
அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலைத் தேடி கேதோரின் எல்லையான பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிக்குச் சென்றனர்.
40
அங்கே அவர்கள் மிகச் செழிப்பான மேய்ச்சலுக்குரிய இடத்தைக் கண்டனர். அந்த நிலம் விசாலமானதும், சமாதானமும் அமைதியுமுடையதுமாக இருந்தது. அங்கே காமியர் சிலர் முற்காலத்தில் வாழ்ந்திருந்தனர்.
41
மேற்கூறப்பட்ட பெயர்களையுடைய இவர்கள், யூதாவில் எசேக்கியா அரசன் ஆட்சி செய்த காலத்தில் அங்கு வந்தார்கள். அவர்கள் அங்கு குடியிருந்த காமியர்களை அவர்களுடைய இடங்களில் தாக்கி, மெயூனியரையும் இன்றுவரை இருப்பதுபோல் முழுவதும் அழித்துவிட்டார்கள். பின்பு அவர்கள் அங்கே தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு உகந்த வளமான இடம் இருந்ததினால் குடியேறினர்.
42
பின்பு சிமியோனியரில் ஐந்நூறு பேரும், இஷியின் மகன்களான பெலத்தியா, நெயெரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் போய் சேயீர் மலைநாட்டைத் தாக்கினார்கள்.
43
அங்கே தப்பி ஓடிப்போய் மறைந்திருந்த அமலேக்கியரை அவர்கள் கொன்று, அவர்கள் இந்நாள்வரைக்கும் அங்கேயே வாழ்கிறார்கள்.
Settings