Skip to content

Wheel பற்றிய பைபிள் வசனங்கள்: Symbolic

20 வசனங்கள் · 3 அம்சங்கள்

Symbolic பற்றிய வசனங்கள்

  1. நான்கு முகங்களையுடைய அவ்வுயிரினங்களை நான் பார்த்தபோது, அவை ஒவ்வொன்றுக்கும் அருகே தரையில் ஒவ்வொரு சக்கரங்களைக் கண்டேன்.

  2. அச்சக்கரங்களின் தோற்றமும், அமைப்பும் எப்படியிருந்ததென்றால், மரகதக் கற்களைப்போல் மினுங்கிக் கொண்டிருந்தன. அவை நான்கும் ஒரேவிதமாகக் காணப்பட்டன. அச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன.

  3. சக்கரங்கள் நகர்ந்தபோது, அவ்வுயிரினங்கள் நோக்கும் நான்கு திசைகளில் ஏதாவது ஒரு திசையில் போயின. அவ்வுயிரினங்கள் ஓடும்போது சக்கரங்கள் திரும்புவதேயில்லை.

  4. அவைகளின் வளையங்கள் உயரமாயும், பிரமிக்கத்தக்கதாயும் இருந்தன. அந்த நான்கு வளையங்களும் சுற்றிலும் கண்கள் நிறைந்தனவாய் இருந்தன.

  5. உயிரினங்கள் புறப்படும்போது, அவைகளின் அருகே இருந்த சக்கரங்களும் புறப்பட்டன. உயிரினங்கள் தரையைவிட்டு மேலெழும்பும்போது, சக்கரங்களும் மேலெழும்பின.

  6. உயிரினங்களின் ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவ்வுயிரினங்களும் செல்லும். சக்கரங்களும் அவைகளோடு எழும்பிச் செல்லும். ஏனெனில், உயிரினங்களின் ஆவி அச்சக்கரங்களிலேயே இருந்தது.

  7. உயிரினங்கள் நகர்ந்தபோது, சக்கரங்களும் நகர்ந்தன. உயிரினங்கள் அசைவற்று நின்றபோது, அவைகளும் அசைவற்று நின்றன. உயிரினங்கள் தரையிலிருந்து எழும்பியபோது, அந்த சக்கரங்களும் அவைகளுடன் சேர்ந்து மேலெழுந்தன. ஏனெனில் உயிரினங்களின் ஆவி அந்த சக்கரங்களிலே தான் இருந்தது.

  8. அச்சத்தம், உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்ததினாலும், அவற்றினருகேயிருந்த சக்கரங்கள் எழுப்பிய சத்தத்தினாலும் வந்த ஒரு அதிரும் சத்தம்.

  9. நான் பார்த்தபோது கேருபீன்களுக்கு அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கேருபீனின் அருகிலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் பத்மராகம்போல பளிச்சிட்டன.

  10. பார்வைக்கு அவை நான்கும் ஒரே மாதிரி தோற்றமளித்தன. அந்தச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன.

  11. அவை நகர்ந்தபோது, கேருபீன்கள் நோக்கிக்கொண்டிருந்த நான்கு திசைகளில் ஏதாவது ஒன்றை நோக்கிப்போயின. கேருபீன்கள் போனபோது, சக்கரங்கள் சுழன்று திரும்பவில்லை. கேருபீன்களின் தலை எத்திசையை நோக்கினதோ அதே திசையில் அவையும் திரும்பாமலே சென்றன.

  12. அவைகளின் முதுகுகள், கைகள், சிறகுகள் அனைத்தும் உள்ளடங்க உடல் முழுவதும் கண்களால் நிறைந்திருந்தன. அப்படியே அந்த நான்கு சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன.

  13. அச்சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என அழைக்கப்பட்டதை நான் கேட்டேன்.

  14. கேருபீன்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதலாவது முகம் கேருபீன் முகமாகவும், இரண்டாவது மனித முகமாகவும், மூன்றாவது சிங்க முகமாகவும், நான்காவது கழுகு முகமாகவும் இருந்தன.

  15. பின்பு கேருபீன்கள் மேலே எழும்பின. கேபார் நதியருகே நான் கண்ட உயிரினங்கள் இவையே.

  16. கேருபீன்கள் செல்லுகையில் அவைகளினருகே இருந்த சக்கரங்களும் சென்றன. கேருபீன்கள் நிலத்திலிருந்து எழும்புவதற்காகத் தங்கள் இறகுகளை விரிக்கும்போது, சக்கரங்கள் அவைகளைவிட்டு விலகவில்லை.

  17. கேருபீன்கள் அசையாது நிற்கையில், அவைகளும் அசையாது நின்றன. கேருபீன்கள் எழும்புகையில் அவைகளும் எழும்பின. ஏனெனில் வாழும் உயிரினங்களின் ஆவி அவைகளில் இருந்தது.

  18. பின்பு யெகோவாவினுடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியை விட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நிறுத்தப்பட்டது.

  19. நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்கள் தங்கள் இறகுகளை விரித்து நிலத்தை விட்டு எழும்பின. அவை செல்லுகையில், சக்கரங்களும் அவைகளோடு சென்றன. அவை யெகோவாவின் ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நின்றன. இஸ்ரயேலின் இறைவனுடைய மகிமை அவைகளுக்கு மேலாக இருந்தது.

  20. அப்பொழுது கேருபீன்கள் தங்கள் அருகிலிருந்த சக்கரங்களோடு இறகுகளை விரித்தன. இஸ்ரயேலின் இறைவனின் மகிமை அவற்றிற்கு மேலாக இருந்தது.