உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Judah பற்றிய பைபிள் வசனங்கள்: Out Lord sprang from

25 வசனங்கள் · 42 அம்சங்கள்

Out Lord sprang from பற்றிய வசனங்கள்

  1. யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன், எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்,

  2. ஆராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,

  3. சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸினுடைய தாய் ராகாப், போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத் ஈசாயின் தகப்பன்,

  4. ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன். தாவீது சாலொமோனுக்குத் தகப்பன், இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.

  5. சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன், ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன், அபியா ஆசாவுக்குத் தகப்பன்,

  6. ஆசா யோசபாத்தின் தகப்பன், யோசபாத் யோராமுக்குத் தகப்பன், யோராம் உசியாவின் தகப்பன்,

  7. உசியா யோதாமின் தகப்பன், யோதாம் ஆகாஸின் தகப்பன், ஆகாஸ் எசேக்கியாவின் தகப்பன்,

  8. எசேக்கியா மனாசேயின் தகப்பன், மனாசே ஆமோனின் தகப்பன், ஆமோன் யோசியாவின் தகப்பன்,

  9. யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

  10. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின்: எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான், சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன்,

  11. செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன், அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன், எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன்,

  12. ஆசோர் சாதோக்கிற்குத் தகப்பன், சாதோக் ஆகீமிற்குத் தகப்பன், ஆகீம் எலியூத்திற்குத் தகப்பன்,

  13. எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்,

  14. யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

  15. இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் கிட்டத்தட்ட முப்பது வயதுடையவராய் இருந்தார். அவர் மக்கள் பார்வையில் யோசேப்பின் மகன் என்றே கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்,

  16. ஏலி மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன், லேவி மெல்கியின் மகன், மெல்கி யன்னாவின் மகன், யன்னா யோசேப்பின் மகன்,

  17. யோசேப்பு மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா ஆமோசின் மகன், ஆமோஸ் நாகூமின் மகன், நாகூம் எஸ்லியின் மகன், எஸ்லி நங்காயின் மகன்,

  18. நங்காய் மாகாத்தின் மகன், மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன், சேமேய் யோசேக்கின் மகன், யோசேக்கு யோதாவின் மகன்,

  19. யோதா யோவன்னானின் மகன், யோவன்னான் ரேசாவின் மகன், ரேசா செருபாபேலின் மகன், செருபாபேல் சலாத்தியேலின் மகன், சலாத்தியேல் நேரியின் மகன்,

  20. நேரி மெல்கியின் மகன், மெல்கி அத்தியின் மகன், அத்தி கோசாமின் மகன், கோசாம் எல்மோதாமின் மகன், எல்மோதாம் ஏரின் மகன்,

  21. ஏர் யோசேயின் மகன், யோசே எலியேசரின் மகன், எலியேசர் யோரீமின் மகன், யோரீம் மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன்,

  22. லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன், யோசேப்பு யோனாமின் மகன், யோனாம் எலியாக்கீமின் மகன்,

  23. எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மென்னாவின் மகன், மென்னா மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன், நாத்தான் தாவீதின் மகன்,

  24. தாவீது ஈசாயின் மகன், ஈசாய் ஓபேத்தின் மகன், ஓபேத் போவாஸின் மகன், போவாஸ் சல்மோனின் மகன், சல்மோன் நகசோனின் மகன்,

  25. நகசோன் அம்மினதாபின் மகன், அம்மினதாப் ஆராமின் மகன், ஆராம் எஸ்ரோமின் மகன், எஸ்ரோம் பாரேஸின் மகன், பாரேஸ் யூதாவின் மகன்,