உள்ளடக்கத்திற்குச் செல்க

The Ishmaelites பற்றிய பைபிள் வசனங்கள்

32 வசனங்கள் · 30 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்; தேமாவில் வசிப்பவர்களே, நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள்.

  2. அவர்கள் பட்டயங்களுக்கும், உருவிய பட்டயத்துக்கும், நாணேற்றிய வில்லுக்கும், போரின் உக்கிரத்துக்கும் பயந்தோடி வருகிறார்கள்.

  3. யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும்.

  4. வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின் போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார்.

  5. தேதானையும், தேமாவையும், பூஸையும் தூர இடங்களிலுள்ள எல்லோரையும்,

  6. அரேபியா நாட்டு எல்லா அரசர்களையும், பாலைவனத்தில் வசிக்கும் அந்நிய நாட்டு மக்களின் எல்லா அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.

  7. சிம்ரி, ஏலாம், மேதியா நாடுகளிலுள்ள அரசர்களையும்,