உள்ளடக்கத்திற்குச் செல்க

The Feast of Tabernacles பற்றிய பைபிள் வசனங்கள்

39 வசனங்கள் · 17 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  2. “ ‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’ ” என்றார்.

  3. பின்பு மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “கடன்களை ரத்துச்செய்யும் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலும் கூடாரப்பண்டிகைக் காலத்தில் இந்த சட்டத்தை மக்களுக்குமுன் வாசிக்கவேண்டும்.

  4. இஸ்ரயேலர் எல்லோரும் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவருக்குமுன் வரும்போது, அவர்கள் கேட்கும்படியாக அவர்களுக்குமுன் இந்த சட்டத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.

  5. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் பட்டணத்தில் வசிக்கும் அந்நியர் ஆகிய மக்களை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், கவனமாகக் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வதற்காக இதைக் கேட்கும்படி ஒன்றுகூட்டுங்கள்.

  6. யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.

  7. யெகோவாவே, எங்களை இரட்சியும்; யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.

  8. யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

  9. யெகோவாவே இறைவன், அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.

  10. நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.

  11. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  12. பண்டிகையின் கடைசி நாளான அந்தப் பெரிய நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “யாராவது தாகமுள்ளவராய் இருந்தால், அவர்கள் என்னிடம் வந்து பானம்பண்ணட்டும்.

  13. வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, என்னை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.

  14. தம்மில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் பின்னர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.